‘பவுன்சர்’ உருவான கதை

cricket (2)டெல்லி: புயல் வேகத்தில் வீசப்படும் ‘பவுன்சர்’ துடுப்பாட்டவீரர்களின் தலை, கழுத்து பகுதியை நோக்கி சீறி வரும். சில நேரம் துடுப்பாட்ட வீரர்களை விட மிக உயரமாக எழும்பும். பவுன்சர்களை பொறுத்த வரை அதை அடிக்காமல் விடுவது சிறந்தது. ஏனெனில் சரியாக கணிக்காமல் ஆடினால் காயம் ஏற் படுவதை தவிர்க்க முடி யாது.

இந்த ‘பவுன்சர்’ ஒரு யுக்தியாக கையா ளப்பட்டது 1930-களில் தான். அப்போது கிரிக்கெட்டில் இங்கிலாந்து-அவுஸ்திரேலியா இடையே ஆஸஸ் தொடர் மட்டுமே தான் பிரபலம். 1930-ம் ஆண்டு நடந்த ஆஸஸ் தொடரை அவு ஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

‘கிரிக்கெட்டின் பிதா மகன்’ என்று அழைக்க ப்படும் அவுஸ்திரேலிய ஜாம்பவான் டொன் பிரட்மன் அந்த தொட ரில் மட்டும் 974 ஓட்ட ங்களை குவித்தார். அவர் ஓய்வு பெறாத வரை நம்மால் ஆஸஸ் தொடரை வெல்ல முடியாது என்று இங்கிலாந்து வீரர்கள் குமுறி னார்கள்.

cricket (2)

அந்த சமயம், அந்த தொடரில் ஒரு டெஸ்டில் மழையால் ஆடு களத்தன்மை மாறியதும், கொஞ்சம் எழும்பி வந்த பந்துகளில் பிரட்மன் தடுமாறுவதையும் கண்டறிந்தனர். 1932-33-ம் ஆண்டு இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா சென்ற போது இங்கிலாந்து கெப்டன் டக்லஸ் ஜோர்டைன் ‘பொடிலைன்’ எனப்படும் உடலை குறி வைத்து தாக்கும் யுக்திகளை தனது பந்து வீச்சாளர்கள் மூலம் தொடர்ச்சியாக மேற்கொண்டார்.

அவ்வாறு வீசும் போது லெக் சைடில் துடுப்பாட்டவீரர்கள் பிடி ஆவார்கள் என்பது கணிப்பு. அதற்கு பலனும் கிடைத்தது. அந்த தொடரில் பிரட்மன் 396 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அதன் விளைவு இங்கிலாந்து 4-1 என்ற கணக்கில் ஆஸஸ் தொடரை கைப்பற்றியது.

ஆனால் ‘பவுன்சர்’ பந்து வீச்சு சர்ச்சையாக உருவெடுத்ததால் அதில் சில கட்டுப்பாடுகளையும் கொண்டு வர வேண்டிய நிலைமை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) ஏற்பட்டது. 1970-80-களில் மெற்கிந்திய தீவு பந்து வீச்சாளர்கள் பவுன்சர்களால் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தி யதை மறந்து விட முடியாது.

cricket

பவுன்சர் விடயத்தில் அவ்வப்போது விதிகளை மாற்றும் ஐ.சி.சி. தற்போது ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 2 பவுன்சரும், 20 ஓவர் போட்டியில் ஒரு ஓவரில் ஒரு பவுன்சரும் வீச அனுமதித்துள்ளது டெஸ்ட் போட்டியில் ஒரு தடுப்பாட்ட வீரருக்கு ஒரு ஓவரில் 2 பவுன்சர் வீசலாம்.

பிலிப் ஹியுக்சின் மரணத்தால் பவுன்சர் வகை பந்து வீச்சு அவசி யமா? என்ற கேள்வி இப்போது எழு ந்துள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் இது போன்ற பந்து வீச்சு தான் சுவாரஸ்யமானது. இந்திய முன் னாள் தலைவர் நரி கான்டிராக்டர் கூறும் போது, ‘இது ஒரு துரதிர் ஷ்டவசமான சம்பவம்.

கிரிக்கெட் உலகம் இளம் மற்றும் திறமையான ஒரு துடுப்பாட்டவீரரை இழந்து விட்டது. ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதி. இத னால் கிரிக்கெட் விதியில் மாற்றங் களை கொண்டு வந்து, பவுன்சரை நீக்கவேண்டும் என்று சிலர் வற் புறுத்துவதாக கேள்விப்படுகிறேன்.

பவுன்சர் பந்து வீச்சுக்கு தடை விதித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகே போய் விடும்’ என்றார். ஆபத்து ஏற்படாத அளவுக்கு ஹெல்மெட்டில் பாதுகாப்பு வசதி களை இன்னும் அதிகப்படுத்துவதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று மற்றொரு தரப்பினர் கூறியுள்ளனர்.

Published by

Leave a comment