காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீதியை அழுபடுத்தும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாலஹ்வின் முயற்சியின் பயனாக மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இருந்து சற்று அருகாமையில் அமைந்துள்ள குர்ஆன் சதுக்கத்தில் பாரிய அளவில் மிகவும் எழில்மிக்க சுற்றுவட்டம் (ரவுண்ட போட்) ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இவ் எழில்மிக்க சுற்றுவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் நேரில் சென்று கேட்டறிந்து கொள்வதற்காக 28-11-2014 நேற்று வெள்ளிக்கிழமை அங்கு விஜயம் செய்த பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுற்றுவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் தொர்பில் கட்டிடப் பணியாளர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
இவ் விஜயத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் ஜெஸீம், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த குர்ஆன் சதுக்கத்தின் சுற்றுவட்டம் (ரவுண்டபோட்) தற்போது முடியும் தறுவாயில் காணப்படுகின்றது.
Published by





Leave a comment