காத்தான்குடி: மஜ்லிசுல் உலமாவுக்கான விவாத ஒப்பந்தக்கடிதம் 10.11.2014 அன்று எமது ஜமாஅத்தினால் உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்டதை ஊடகங்கள் வாயிலாக நன்கறிந்திருப்பீர்கள்.
1-அக்கடிதத்தில் விவாத ஒப்பந்தத்திற்கான இடத்தை குறிப்பிட்டிருந்தோம்.
2-விவாத ஒப்பந்தம் செய்யும் நேரத்தைக் குறிப்பிட்டிருந்தோம்.
3-விவாத ஒப்பந்தம் செய்வதற்கான கால அவகாசத்தை தெளிவுபடுத்தியிருந்தோம்.
4-விவாத ஒப்பந்தத்தில் எமது தரப்பில் கலந்து கொள்ளும் நபர்களது எண்ணிக்கையை குறிப்பிட்டிருந்தோம்.
மேற்குறித்த எமது தேர்வுகளில் மாற்றுக்கருத்து இருந்தால் அதை தெரியப்படுத்துமாரும் அக்கடிதத்தில் கோரியிருந்தோம்.
இவ்வளவு விடயங்களையும் எமது விவாத ஒப்பந்தக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்பினோம். ஆனால் மஜ்லிசுல் உலமாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. விவாத அழைப்பை ஏற்கிறோம் என்று வீரச்சவால் விட்டவர்கள் அதை உரிய திகதியில் எதிர் கொள்ள இயலாதவர்கள் என்பதை தற்போது நிரூபித்துள்ளார்கள்.
எமது கடிதம் அனுப்பப்பட்டு இன்றுடன் 13 நாட்களாகின்றன என்பதை இங்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம். மௌலவி அப்துர் றஊபின் விவகாரங்களை எதிர் கொள்ள மஜ்லிசுல் உலமா தொடை நடுங்கியது போன்று எமது விவாத ஒப்பந்தக்கடிதம் கண்டும் தொடை நடுங்கியுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
Published by


Leave a comment