வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால்  நீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் அட்டாளைச்சேனை  பிரதேச சபையின் உறுப்பினர்கள்

10811456_1627598930796671_1491054738_n (1)– பழுலுல்லாஹ் பர்ஹான்

அட்டாளைச்சேனை: இலங்கையின் சில பகுதிகளில் பெய்து கொண்டிருக்கும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது. அதுபோன்று அட்டாளைச்சேனையில் பல பகுதிகளிலும் பாதைகள் சீர் கெட்டு காணப்படுவதுடன் 09ஆம்,  10ஆம் பிரிவுகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் சில குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறி தங்களின் குடும்பங்களின் வீடுகளில் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளையும் பாதைகளையும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், எஸ்.எல்.முனாஸ், பிரதேச சபையின் செயலாளர் ஏ.சித்தீக் ஆகியோர் பார்வையிட்டு நீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அவசரமாக செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

10811456_1627598930796671_1491054738_n (1)

10816240_1627599080796656_1459022304_n (1)

Published by

Leave a comment