கொழும்பு;முப்பது வருட கால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் நிம்மதியாக வாழ வழிவகுத்த தலைவனுக்கு நன்றி தெரிவிப்பது இலங்கை நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் தலையான கடமையாகும். நாட்டில் பல்லின மக்களும் நிம்மதியாக வாழ வழிவகுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி சொல்ல சகலரும் கடமைப்பட்டுள்ளனர். அந்த நன்றி என்பது நாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கப் போகும் வாக்குகளாக இருக்கட்டும்.
அது மாத்திரமின்றி ஆசியாவின் முதல் மனிதனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்கின்றார். அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை வரலாறு காணாத அபிவிருத்திகளைக் கண்டுள்ளதோடு, எங்களை நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வைத்துள்ளார். அவரை நாம் மறக்கக்கூடாது.
மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் எங்களது வாழக்கைத்தரம் உயர்வடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யார் எதிர்த்து நின்றாலும் நாம் அவருடனே இருப்போம். கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு தேசிய காங்கிரஸ் முன்னின்று உழைத்தது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்,முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Leave a reply to alif Cancel reply