கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளரின் சிபார்சில் பத்துப் பேருக்கு பாடசாலை காவலாளி நியமனம்

eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: கிழக்கு மாகாணசபையின் ஆளுகைக்குட்பட்ட பாடசாலைகளிலுள்ள காவலாளிகள் வெற்றிடத்தை நிரப்புமுகமாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும்,தற்போதைய பிரதி தவிசாளருமான அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்களின் சிபார்சில் இன்று காலை அவரது காரியாலயத்தில் வைத்து பத்துப் பேருக்கு அப்பதவிகளுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

இந் நியமனக்கடிதங்களை தேசிய காங்கிரஸின் மாவட்ட செயலாளரும்,பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நஸீர் அவர்களும்,அலிகார் தேசிய பாடசாலை அதிபரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் கிளை மசூறா குழுத்தலைவருமான அல்ஹாஜ் ஏ.எம்.தௌபீக் சேர் அவர்களும் வழங்கிவைத்தார்கள்.

eravur

கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். சுபைர் அவர்கள் கட்சியின் முக்கிய விடயமாக கொழும்பில் நிற்பதால் ,இந் நியமனங்களை உடனடியாக வழங்கிவைக்க நடவடிக்கை மேற்கொண்டு ,இன்று காலையிலேயே திருகோணமலையிலிருந்து அமைச்சரது பணியாளர் மூலம் ஏறாவுருக்கு நியமனக் கடிதங்கள் கொண்டுவரப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

eravur (2)

Published by

Leave a comment