புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதிபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

1222எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதிபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி மாணவர்களின் பெற்றோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பரீட்சையில் தோற்றிய (73) அனைத்து மாணவர்களுக்கும்  பரிசுப்பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு அவர்களின் திறமைகளையும் வெளிக்கொணரும் வகையில் சித்தி பெற்ற சித்தி பெறாத அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து பாடல், நாடகம், ஹதீஸ் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

அத்துடன் பாடசாலை அதிபருக்கும் இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் தரம் 1 முதல் கற்பித்த ஆசிரியைகளும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் எம்.எம். இஸ்மாலெவ்வை காத்தான்குடி கோட்ட கல்விப்பணிப்பாளர் எம்.ஏ சி எம் பதுர்தீன் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எஸ் அகமட் மற்றும் ஐ எஸ் ஏ உறுப்பினர்கள் உட்பட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment