இன்றைய இலங்கையின் அரசியல் சூழல்

srilankaவன்னிக் குரலான்

ஜனாதிபதி தேர்தலில் யார் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஒரு மித்த முடிவுகள் முஸ்லிம் தலைமைகளால் இன்னும் எடுக்கவில்லை என்று பல தரப்புக்களிலும் குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்த குற்றச்சாட்டு தொ்டர்பில் நாம் இங்கு கவனம் செலுத்துவது பொருத்தமானதாகும்.

ஜனாதிபதி தேர்தல் திகதி வெளியாகும் வரை முஸ்லிம் கட்சிகள் நாட்டில் முஸ்லிம்களின் உள்ளத்தில் என்ன இருக்கின்றது என்ற நாடிப்பிடிப்பை கண்டறியும் பணியினை இப்போது ஆரம்பித்துள்ளதுடன். முஸ்லிம் கட்சிகளில் உள்ள தனிப்பட்ட நபர்கள் அவர்களது கருத்துக்களையும் வெளியிட்டுவருகின்றனர்.

இலங்கையின் அரசியலில் தேர்தல்களை மக்கள் சந்திப்பது என்பது சாதாரண ஒரு நிகழ்வாகும். அடிக்கடி தேர்தல்கள் வருவதினால் தேர்தலின் பெறுமதி தொடர்பில் மக்கள் தமது பார்வையினை பெரிதாக செலுத்தலவதில்வை என்பதை கடந்த கால தொடர் தேர்தல் முடிவுகளை வைத்து நாம் கணித்து கொள்ளமுடியும். ஒவ்வெரு தேர்தல் வேளையிலும் ஆளும், எதிர் தரப்புக்களால் பெரும் விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும்  கூறப்படுவது இயற்கையானது என நாம் ஏற்றுக்கொண்டு செல்வதையும் பேசக் கேட்டிருக்கின்றோம்.

இன்றைய இலங்கையின் அரசியல் சூழல் என்பது நாடு மக்களுக்கா? அல்லது நாடு பயங்கரவாதத்திற்கா ? என்ற கேள்வியினை முதன்மைப்படுத்திய நிலையிலேயே பேசப்படுகின்றது. இது உண்மையா? பொய்யா? என்பதிலும் கயிறு இழுப்புக்கள் இல்லாமல் இல்லை. அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி மஹிந்தவே போட்டியிடுவார் என்பது உறுதியானதொன்று, ஆனால் எதிர்கட்சி சார்பில் யார் என்பதில் உறுதியான தீர்மானமில்லை. குறிப்பாக பிரதான எதிர்கட்சியான ஜக்கிய தேசிய கட்சி கூட தமக்குள் குழப்பம் அடைந்த நிலையில் ஒவ்வொருவரது பெயர்களை மாறி மாறி கூறிவருகின்ற நிலையினை கானுகின்றோம். அதே போல் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மனோ கணேஷன் போன்றவர்களும் தாங்கள் மஹிந்தவுக்கு எதிரானவர்கள் என்பதை அறிவித்துள்ளனர். இவர்களின் நிகழ்ச்சி நிரல் தனிப்பட்டது. அது மீண்டும் இந்த நாட்டில் அச்சத்தை ஏற்படுத்துவது என்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. இந்த கட்சியின் மக்கள் பிரதி நிதிகள் என்று கூறுபவர்களின் வாய்களில் இருந்து வருகின்ற சூடான மற்றும் நிதானமிழந்த பேச்சுக்கள் அதனை உறுதிபடுத்துகின்றன. தமிழ் பிரதேசம், தமிழர்களின் ஆட்சி, தமிழர்கள் தமிழர்களால் ஆழப்பட வேண்டும் என்று கூறுவதை வைத்து இவர்களால் எனைய சமூகங்களுக்கு இந்த நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என்பது உறுதியான விடயம். இவர்கள் சேரும் கூட்டம் இலங்கையில் மீண்டும் இனங்களுக்கிடையில் அடக்கு முறைக்கான சதி திட்டத்தின் வரைவுக்கு எவர் ஆதரவு கொடுக்கின்றாரோ?அவர் தான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சின்ம சொற்பனமாகும்.

ஏனைய கட்சிகள் இன்னும் தமது சந்திப்புக்களை நடத்திவருகின்ற நிலையில் முஸ்லிம்கட்சிகள் எதனை செய்யப் போகின்றார்கள், அவர்களின் முடிவு என்ன என்பது தொடர்பில் ஆளும், எதிர் கட்சிகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் முஸ்லிம் கட்சிகளின் வகிப்பகங்கள், நகர்வுகள், நகர்தல்கள், என்பது இன்றைய காலத்தின்  முக்கிய பங்காகும். இன்று இந்த நாட்டில் மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்த முடியும் என்று கூறப்படுகின்றது. அதில் எத்தனை சதவீதமான உண்மைகள் இருக்கின்றது என்பதை அரசியல் வாதிகளிடம் கேட்காமல் சாதாரண பொதுமக்களிடம் கேட்டால் அதிகமானவர்கள் உண்மை என்று சொல்வார்கள். இதற்கான மாற்றம் என்ன என்பது தொடர்பில் நாம் கூற வேண்டிய தேவையில்லை.

அழிவுகளை சந்தித்த எமது இலங்கை நாடு இன்று அபிவிருத்தியின் பக்கம் சென்று கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். தனிப்பட்ட கட்சி வேட்கைகளுக்காக இடம் பெறும் மக்கள் நலன் திட்டங்களுக்கு தடையேற்படுத்தி அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று போலிப் பிரசாரங்களை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்வதையும் நாம் காணுகின்றோம். மக்களாகிய எமது எதிர்பார்ப்பு என்பது வேறுபட்டது. அது அரசியல் கடந்து சமூக  நோக்கில் பார்க்க வேண்டும்.

இந்த பார்வை சரியானதாக நீதமானதாக இருக்க வேண்டும் என்பதிலும் நாம் நேர்மைத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் தொடர்பில் பேசப்படுகின்றது. இந்த பொது வேட்பாளர் யார் என்பதை இப்போது அறிவிக்க முடியாது என்ற கருத்தும் பிரசுரமாகியுள்ளது. இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை எமது மக்கள் காத்திருக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மை கட்சிகள்  என்ன செய்யப்பபோகின்றது.எப்போது தனது முடிவை அறிவிக்கப் போகின்றது. இதற்கு முன்னர் இந்த கட்சிகள் சில விடயங்களை உள்வாங்க வேண்டும்.

தாமாக சுய விசாரணையினை இந்த கட்சிகள் செய்ய வேண்டும். அதற்காக ஒப்பீட்டு அரசியலை முதன்மைப்படுத்தி சில தீர்மாணங்களை எடுக்க வேண்டும். எழுந்தமான தனிப்பட்ட நிரலுக்கு முன்னுரிமையளித்து தீர்மாணங்கள் எடுக்கப்படும் போது அதனது பாதகங்களை சுமக்க இந்த கட்சிகள் தயாராக வேண்டும்.ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகளுக்குள் இந்த சிறுபான்மை கட்சிகள் தமது மூக்கை நுழைத்துவிடுவது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

இன்று வடக்கிலும், ஏனைய பகுதிகளிலும் இடம் பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் மக்களுக்கு என்ன தேவை, அதனை எங்கிருந்து பெற முடியும் என்பது தொடர்பிலும் கருத்தாடல்கள் செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பினை எப்படி வழங்குவது, அதனை தரக் கூடிய ஜனாதிபதி , அரசாங்கம் எது என்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்களை செய்ய வேண்டும் என்பதே எமது நோக்கு

பிழையான தீர்மாணங்கள் ஒரு போதும் மக்களுக்கு நன்மையளிப்பதில்லை. கூட்டுப் பொறுப்பும், திறந்த மனதுடனானனே கலந்துரையாடல்களும், கறுத்துப்பறிமாறல்களுமே யதார்த்தமாகும்.

Published by

Leave a comment