நடுச்சாமம்
நச்சரிப்பில் கிடக்கிறாள் மனைவி
வானம்
அழுது முடித்திருந்தது
ஆனாலும்
ஈரம் காய்நிருக்கவில்லை.தொட்டுத் தேடுகிறேன்
இருட்டென்பதால்
அகப்படவில்லை அந்த விளக்கு…வெளியில்
நாய்களின் சப்தம்
ஏதோ நடக்கிறது என்பதை
எடுத்துக் காட்டியது..தடவியெடுத்த தடியோடு
வெளியே வருகிறேன்
முகத்தை
முக்காட்டுக்குள் மூடிக்கொண்டு
என் வீட்டுச்சுவரில்
எவரோ தாறு பூசுகிறார்கள்அடியாட்கள் என்பதால்
உள்மனது
ஒளிந்து கொள்ளச் சொன்னது
மீண்டும்
போர்வைக்குள் புகுந்து கொண்டேன்.பொழுது
பூரணமாக் புலரவில்லை
எட்டிப்பார்க்கிறேன்
அந்த அதிகாலை வேளையில்
அடுத்த வீட்டு ஆதங்காக்கா
தண்ணீரால் கழுவிக் கழுவி
தலைவனின் முகத்தைத் தேடுகிறார்.
முடியவில்லை
அடுத்த போஸ்டரை
அதற்கு மேல் ஒட்டிவிட்டு
திருப்தியோடு திரும்பிப் போகிறார்.அவர்கள் ஒட்டவும்
இவர்கள் கிழிக்கவும்
இன்னுமொரு தேர்தல் வரப்போகிறதாம்.
2015 இல்…
16.11.2014

Leave a comment