மட்டக்களப்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தூர நோக்கு திட்டத்தின் கீழ் 2015 வரவு செலவு திட்டத்தினுடாக மாவட்டத்தில் கடந்த கால வரட்சியினால் பாதிக்கப்பட்டு 2014,2015 பெரும் போக நெய்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இலவச விதை நெல்லுக்கான கொடுப்பனவுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று 16-11-2014 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விநாய மூர்த்தி முரளிதரன்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டு -மாவட்டத்தில் கடந்த கால வரட்சியினால் பாதிக்கப்பட்டு 2014,2015 பெரும் போக நெய்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு விதை நெல்லுக்கான கொடுப்பனவுக்கான காசோலைகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இம் மாவட்டத்தில் பாதிக்ப்பட்ட விவசாயிகள் சுமார் இரண்டாயிரம் பேருக்கு 110 மில்லியன் ரூபாய் பகிர்தந்ளிக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது இதில் விதைநெல் இலவச விநியோகத்திற்கு 50 மில்லியன் ரூபாவும் குளங்கள் புனரமைப்புக்கு 60 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எந்திரி சிவலிங்கம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின மாவட்ட உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம் ,மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மாவட்ட செயலக பிரதம கணக்காளர் என்.நேசராசா,பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரனின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,பிரதியமைச்சர் விநாய மூர்த்தி முரளிதரனின் ஊடக இணைப்பாளர் எஸ்.ஜீவானந்தன் உட்பட பெருமளவிலான விவசாயிகள் கலந்து கொண்டனர்.




Leave a comment