சம்மாந்துறை: திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சம்மாந்துறைப் பிரதேச வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொருட்களை கையளிக்கவுள்ளார்.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மு.கா உயர்பீட உறுப்பினரும், சவூதி அரேபியா தூதுவராலய பொதுத் தொடர்பாடல் அதிகாரியுமனா ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச சபை மு.கா உறுப்பினர்கனான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா, எம்.ஐ.எம்.றனூஸ், வீ.ரி.நஜீம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் 25 சிவில் அமைப்புகளிலுள்ள வறிய குடும்பங்களுக்கு 35 இலட்சம் ரூபா பெறுமதியாக வாழ்வாதாரப் உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்படவுள்ளன.
Published by

Leave a comment