ஐ.எஸ். இன் மற்றுமொரு படுகொலை வீடியோ

isisமொசூல்: இஸ்லாமிய தேசம் குழுவால் கடத்திச் செல்லப்பட்ட அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியரின் மரணத்தைக் காட்டுவதாக கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. கடத்தப்படுவதற்கு முன்னர் பீட்டர் காஸிக் என்று அறியப்பட்ட இவர் கடந்த ஆண்டு சிரியாவில் வைத்து இஸ்லாமிய தேசம் குழுவால் கடத்தப்பட்ட பின்னர் அப்துல் ரஹ்மான் காஸிக் என்றழைக்கப்பட்டார்.

இந்த வீடியோவில் கறுப்பு உடையணிந்த இஸ்லாமிய தேசம் குழுவைச் சேர்ந்தவராகத் தெரியும் ஒரு ஆண் கையில் கத்தியுடன் காணப்படுகிறார். அந்த காட்சியின் பின்னணியில் பீட்டர் காஸிக் கொல்லப்பட்டார் என்கிற செய்தி தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோவில் பிடிபட்ட சிரிய இராணுவத்தினர் என்று கூறப்படும் பல ஆண்களின் உயிரற்ற சடலங்களின் மோசமான காட்சிகளும் இருக்கின்றன.

isis
ஐ.எஸ். அமைப்பால் கொல்லப்பட்ட பீட்டர் காஸிக்

Published by

Leave a comment