ஏறாவூர்: ‘தயட்ட செவன’ எனப்படும் தேசத்துக்கு நிழல் மர நடுகை நிகழ்ச்சித்திட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தால் இன்று சனிக்கிழமை (15) காலை 10.41 இக்கு ஏறாவூர், மிச் நகர் வித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனிபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரேதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச மரண விசாரணை அதிகாரிஇபொதுமக்கள் என பலரும் மர நடுகையில் ஈடுபட்டனர்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மரநடுகை வைபவத்தில் தேசிய காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நஸீர், உதவி பிரதேச செயலாளர் செல்வி ஏ.சி.ரமீசா இபாடசாலை அதிபர் ஜனாப் ஏ.றியாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு எஸ்.சிவலிங்கம், கிராமசேவையாளர் நிருவாக உத்தியோகத்தர் திரு ஜோர்ஜ் கிருபாகரன், திவிநெகும உத்தியோகத்தர் ஜனாப் எம்.எச்.எம்.அஸீம், கிராமசேவையாளர் ஜனாப் ஸாகீர் ஹுசைன், சமூர்த்தி உத்தியோகத்தர் ஜனாப் யூ.எல்.ஏ. கபீர் ஆகியோரோடு அக்கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
பசுமை நிறைந்த நாடு, ஒளிமையான எதிர்காலம் எனும் தேசிய மர நடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக வனப்பரப்பை அதிகரிப்பதற்கான இலக்கினை வெற்றி கொள்வோம் எனும் தொனிப் பொருளில் இந்த தேசிய மர நடுகை திட்டம் நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ் தேசிய ரீதியிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், மர நடுகை வைபவம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம். ஹனிபா தெரிவித்தார்.
Published by

Leave a comment