‘தேசத்திற்கு நிழல்’ மரம் நடுகின்ற நிகழ்வு காத்தான்குடி முதியோர் இல்ல வளாகத்தில்

unnamedஅஹமட் றிஸ்வி

காத்தான்குடி: ‘தயட்ட செவன’ – ‘தேசத்திற்கு நிழல்’ வேலைத்திட்டத்தின் கீழ்  மரம் நடுகின்ற நிகழ்வு காத்தான்குடி முதியோர் இல்ல வளாகத்தில்  (15/11/2014)   இன்று காலை உதவி  திட்டமிடல் பணிப்பாளர்   A. கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் பிரதம அதிதியாக, காத்தான்குடி பிரதேச உதவி பிரதேச செயலாளர் AC. அகமட் அப்கர் அவர்களும் கிராம சேவையாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், காத்தான்குடி பிரதேச செயலக உறுப்பினர்கள்  இவர்களோடு முதியோர் இல்ல உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர்.

இதில் உரையாற்றிய உதவி பிரதேச செயலாளர்,  அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் இரண்டாவது பதவி ஏற்பு மற்றும் அவரது  பிறந்த தினம் ஆகிய நாளையொட்டி தேசிய ரீதியில் முன்னெடுக்கப் பட்டுவரும்  இம் மரநடுகை வேலைத்திட்டமானது, கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த, அதிக மரங்களை நட்டமைக்காக சமாதானத்திட்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்ட மாக்கார் அவர்களை நினைவு  கூர்வதாய்  அமைகிறது என்றார்.

மேலும் அவர் காத்தான்குடி முதியோர் இல்ல முதியோர்களின் அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கான கொடுப்பனவுக்கான  ஏற்பாடுகள் பற்றியும் தெளிவுபடுத்தினார். தேசிய  மரநடுகை வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 40 நிழல் தரும்  மரங்கள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment