வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்

mahindaகண்டி: வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை இன்றும் நாளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான்கு இடங்களில் ஆரம்பித்துவைப்பார். வடக்கில் அதிவேகப் பாதை நிர்மாணிக்கப் படுவதால் கொழும்பிலிருந்து கண்டிக்கும், தம்புள்ளைக்கும் ஒன்றரை மணித்தியாலத்தில் செல்லலாமென தகவல், ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். 500 பில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்க ப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான அடிக்கல் ரம்புக்கன, கலகெதர, கலேவல மற்றும் குருணாகலை ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் இடம்பெறும்.

‘செங்கட தொரட்டுவ’ என்னும் கண்டி அதிவேகப் பாதைக்கான அடிக்கல்லை ஜனாதிபதியவர்கள் இன்று காலை 10 மணிக்கு கலகெதரவிலும் 11.30 மணிக்கு ரம்புக்கனையிலும் நாட்டி வைப்பார். இதேவேளை ‘சிலுமினி தொரட்டுவ’ எனப்படும் வடக்கு அதிவேக பாதைக்கான அடிக்கல்லும் அன்றையதினமே மாலை 2.30 மணிக்கு கலேவெல பிரதேசத்தில் ஜனாதிபதியவர்களால் நட்டு வைக்கப்படும் அதனைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு அதன் தொடர்ச்சியாக கட்டுவனவில் அடிக்கல் நடப்படும். அன்றைய தினமே மாளிகாபிட்டியவில் ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கும் ஏற்பாடாகியுள்ளது.

உள்ளூர் ஒப்பந்தக்காரர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படும் முதலாவது அதிவேகப் பாதை இதுவாகும். முழுத் தூரத்தில் 60 வீதத்தை உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் நிர்மாணிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாதை நிர்மாணிப் பணிகள் வெற்றிகரமாக நிறைவேறப் பிரார்த்தித்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.நிர்மாணப் பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.

300 பில்லியன் ரூபா செலவில் நான்கு பிரிவுகள் நிர்மாணிக்கப்படும்.

இந்த அதிவேகப் பாதையில் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கலாம்.

முதல் கட்டம் 42-45 மாதங்களுக்குள் பூர்த்தி பெறுமென்று பெருந்தெருக்கள், துறைமுக, கப்பற்துறை அமைச்சின் செயலர் ரன்ஜித் பிரேமசிரி தெரிவித்தார்.

வடக்கு அதிவேக பெருவீதி ஆரம்பப் பணிகள் ஆரம்பமாவதையிட்டு கண்டியை மையமாகக் கொண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளும் சமய ஆராதனைகளும் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன.

மேற்படி அதிவேக பெரு வீதிக்கான ஆரம்பப் பணிகள் 14, 15ம் திகதிகளில் இடம்பெறும். இது தொடர்பாக (13) கண்டியில் பல்வேறு சமய கலாசார நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.

13ம் திகதி ஸ்ரீ தலதாமாளிகை, கண்டி மீராமக்காம் பள்ளிவாயல், கண்டி கட்டுகலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் ஆலயம் என்பவற்றில் சமய ஆராதனைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இதற்கு இணையாக கண்டி பிரதான பஸ்தரிப்பில் அமைக்கப்பட்டுள்ள கூடங்கள் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படுவதுடன் கடைத் தொகுதிகள் அகற்றப்பட்டு பஸ் நிலைய சுற்றுச் சூழல் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. கண்டி வைத்தியசாலையின் முன் புறமும் காபட் இட்டு அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

பொல்கொல்லையில் பிரமாண்டமான சகல வசதிகளும் கொண்ட கலை அரங்கு கேட்போர் கூடத் தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்வாறு பல்வேறு வகைகளிலும் கண்டி அவசர அவசரமாக அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

Published by

Leave a comment