ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னணி உதைபந்தாட்ட அணியான ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வை முன்னிட்டு இன்று மாலை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகத்துக்கும்இ வாழைச்சேனை அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான சினேக பூர்வ உதைப்பந்தாட்ட நிகழ்வு இடம் பெற்றது.
ஏறாவூர் லக்கி ஸ்டார் கழக தலைவர் ஜனாப் எம்.ஏ. மஜீத், செயலாளர் ஜனாப் ஏ.சி.எ. ஸலாம் ஆகியோர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வுக்கு தேசிய காங்கிரசின் மாவட்ட செயலாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கழக வீரர்களுக்கான சீருடையை ஏறாவூர் நசீஹா கொன்ரக்சன் உரிமையாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நளீம் அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி அணியாக ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1 : 0 என்ற அடிப்படையில் தெரிவானது.
Published by

Leave a comment