கின்னியா: கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றுகின்ற 600க்கு மேற்பட்ட உழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைவாக திருகோணமலை மாவட்டத்தின் கிண்னியா நகர சபையில் தற்காலியமாகாக கடமையாற்றி வரும் சுகாதார தொழிலாளி, சாரதி,பாதுகாவலாளி,வீதிதொழிலாளிகள் உள்ளிட்ட உழியர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி நேற்று மாலை 4.30 மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் வைத்து சந்திந்து கலந்துரையாடியுள்ளனர்.
இது தொடர்பில் தாம் விஷேட கவனம் எடுத்து தற்காலியமாக கடமை புரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கைகள் ஓர் இரு தினங்களில் மேற்கொள்ளப்படும்மென முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் நம்பிக்கை தெரிவித்தார்.
Published by
![najeeb-a-majeed[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/najeeb-a-majeed1.jpg?w=133&h=150)
Leave a comment