கொழும்பு: மருத்துவ தாதி சேவைக்காக முதன்முறையாக ஒரே தடவையில் 5 ஆயிரம் பேரை பயிற்சியில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தாதியர் பயிற்சிக்காக மேற்படி மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வைபவம் நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
மஹிந்த சிந்தனை தொலைநோக்கினை யதார்த்தபூர்வமாக்குவதன் மூலம் மனிதவள அபிவிருத்தியூடாக திறமையானதும் பரந்துபட்டதுமான சுகாதார சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்னும் ஒரே நோக்கிலேயே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் இதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தாதியர் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிறந்த பயிற்சிகளை பெற்றுக் கொடுக்கும் ஒரே நோக்கில் நாடு முழுவதுமுள்ள 18 தாதியர் கல்வி வித்தியாலயமும் சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2010ம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக மூவாயிரத்து 366 பேரும் 2012 ல் 2 ஆயிரத்து 239 பேரும் 2013 ல் 2 ஆயிரத்து 823 பேரும் 2014 ம் ஆண்டிற்காக 2 ஆயிரத்து 535 பேரும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.
நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவையை மேலும் பலப்படுத்த வேண்டுமென்பதை கருத்தில் கொண்ட அரசாங்கம், 2005ம் ஆண் டில் 15 ஆயிரமாகவிருந்த தாதியர்களின் எண்ணிக்கையினை 2014 ம் ஆண்டிற்குள் 30 ஆயிரத்து 547 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து ள்ளது.
2017ம் ஆண்டில் மக்கள் சனத்தொகையின் ஒரு இலட்சம் பேருக்கு 160 தாதியர்கள் இருக்க வேண்டுமென்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by
![districtnurse_010645_tnb[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/districtnurse_010645_tnb1.png?w=112&h=150)
Leave a comment