-எம்.எச்.எம்.அன்வர்-
மட்டக்களப்பு;எதிர்வரும் 19 ம் திகதிக்கு முன்னர் திவிநெகும பயனாளிகள் அனைவருக்கும் ரூ.2500ஃ- வீடு திருத்தம் செய்வதற்கு வழங்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான எம்.எல்.ஏ எம் ஹிஸ்புள்ளா தெரிவித்தார்,
இன்று அகில இலங்கை திவிநெகும அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த மாநாடு மட்டக்களப்பு மஹஐன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது இதன்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
மட்டக்களப்பு மாவட்டம் வறுமை கூடிய மாவட்டம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது இதற்காக நூற்றுக்கணக்கான உத்தியோகத்தர்கள் கடமைபுரிக்கின்றனர் முதலில் தனி நபர் வறுமையை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அடுத்து குடும்ப வறுமையை போக்குதல் வேண்டும் அடுத்த கட்டமாக கிராம மட்டத்தில் வறுமையை இல்லாமல் செய்ய நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் கடமை மேற்கொள்ள வேண்டும்,
வறுமையை போக்க திவிநெகும திட்டத்திற்காக ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ அவர்கள் கணிசமான அளவு நிதியை எமது பொருளாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளார்கள் இதற்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்
வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன பாலங்கள் கட்டப்படுகின்றன பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றது மற்றும் பல்வேறு கட்டுமானப்பணிகளில் நாடு பல்வேறு முன்னேற்றம் கண்டுள்ளது.அத்துடன் எதிர்வரும் தேர்தலில் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ அவர்களை வெற்றியடையச் செய்வதற்கும் இவ்வாறான திட்டங்கள் தொடர்பாக மக்களை சென்றடைந்து தெளிவுபடுத்துவதும் உங்கள் அனைவரினதும் பொறுப்பாகும் இவ்வாறு தெரிவித்தார்.
சங்கத்தின் மாவட்ட தலைவர் என் ரவீந்திர குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய சங்கத்தின் செயலாளருமான ஐகத் குமார கடுவெல மாநகர சபையின் உறுப்பினர் டிபால் ஹெட்டியாராய்ச்சி மாவட்ட திவிநெகும பிரதிப்பணிப்பாளர் மனோகிதராஐா உட்பட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Published by






Leave a comment