பாலமுனை: அல்குர்ஆன் பாடசாலை என்பது வெறுமனே அல்குர்ஆனை ஓதப்பயிற்றுவிப்பதோடு தமது பணியை சுருக்கிக் கொள்ளாமல் சிறார்கள் தமது அன்றாட வாழ்வை ஒழுங்கு படுத்தவும் இஸ்லாமிய வாழ்க்கையை பேணி நடக்கவும் வழிகாட்ட வேண்டும். அந்த வகையில் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை தமது மாணவர்களை தொழுகை பற்றி அறிவூட்டுவதையும் அதனை நடைமுறை ரீதியாக பழக்குவதையும் இலக்காக கொண்டு தொழுகை பயிற்சி முகாம் ஒன்றை 06-11-2014 வியாழக்கிழமை பாலமுனை கடற்கரை வளாகத்தில் நடாத்தியது.
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம். அஸ்ஹர் நளீமி தலைமையில் இடம்பெற்ற மேற்படி தொழுகை பயிற்சி முகாமில் வுழு செய்யும் ஒழுங்கு, அதான், இகாமத் சொல்லும் முறைகள், தொழும் ஒழுங்கு, அதில் ஓதும் அவ்றாதுகள், தொழுகை முடிந்த பின் மொழியும் திக்ர்கள் என பல்வேறு விடயங்கள் காணொளிகள், பயிற்சிகள், விளையாட்டுக்கள், கார்டூன்களினூடாக ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தி பயிற்றுவிக்கப்பட்டது.
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயதை அடைந்த மாணவர்களில் 81 மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டதோடு நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், சிறார்களுக்காக அழகிய முறையிலும், எளிய நடையிலும் வடிவமைக்கப்பட்ட ‘வாருங்கள் தொழுவோம்’ என்ற புத்தகமும் வழங்கப்பட்டன.
Published by

Leave a comment