துபாயில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் இலங்கை குழு பங்கேற்ப்பு

 unnamedACM. சப்றி

துபாய்: 10 வது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு துபாயில் அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை இடம்பெற்றது. ஐக்கிய அரபு இராச்சிய உப ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் துபாயின் ஆட்சியாளருமான சேக் முகம்மட் பின் றசீட் அல் மக்தூம் தலைமையில் தொடங்கிய இம்மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பொருளாதார வல்லுணர்கள் கலந்து கொண்டனர் .

மலேசிய பிரதம மந்திரி, கசக்கஸ்தான் ஜனாதிபதி மற்றும் முஸ்லிம் உலக நாடுகளின் தலைவர்கள் அமைச்சர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இலங்கை குழுவில் துபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதுவர் எம்.எம். அப்துல் றஹீம், இலங்கை வர்த்தக சபையின் தலவைர் பாறுக் காசீம், அமானா வங்கியின் நிறைவேற்று அதிகாரி முகம்மட் அஸ்மிர் மற்றும் அமானா கம்பனியின் இயக்குனர் அப்துல்லா காசீம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் .

unnamed

Published by

Leave a comment