காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் (உஐப)மனிதாபிமான சேவைகள் மற்றும் சகவாழ்வுக்கான பிரிவின் ஏற்பாட்டில் ஹிஐ;ரி 1436 முஹர்ரம் 10ம் நாள் ஆஷூறா நோன்பு திறக்கும் நிகழ்வு உபை பள்ளிவாயலில் நேற்று இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில், மௌலவி எம்.ஐ.எம்.கபூர் மதனி அவர்களின் விஷேட சொற்பொழிவு இடம்பெற்றதுடன் உலமாக்கள் மௌலவிமார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மௌலவி எம்.ஐ.எம்.கபூர் மதனி தனதுரையில்,
எமது வாழ்க்கையிலும் சரி பொது வேலைகளாயினும் சரி திட்டமிடப்பட்;டு நாம் செய்துகொள்ளவேண்டிய வேலைத்திட்டங்கள் மற்றும் இஸ்லாமிய நடைமுறைகள் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் எனவும் திட்டமிடப்படாததாலேயே இஸ்லாமிய நெறிமுறைகள் வழி தவறிப்போகின்றன எனவும் நபி (ஸல்)அவர்கள் தனது எந்த செயற்பாடாகிலும் திட்டமிட்டே செய்து வெற்றியடைந்துள்ளார்கள் எனும் தொனிப்பொருளில் தனது உரையினை நிகழ்த்தினார்.
Published by




Leave a comment