காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை சலாக்கா பிளேஸ் இல் ஷீயாக்களின் ஒன்று கூடல் ஒன்று (05.11.2014 புதன்கிழமை) இரவு ரகசியமாக இடம் பெற்றுள்ளதாக தவகல் ஒன்று கசிந்துள்ளது. இந்த ஒன்று கூடலுக்கான அனுமதியை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தில் பதவி வழியில் இருந்து கொண்டு கூடுதல் அதிகாரம் செலுத்தும் ஓர் ஹாஜியார்தான் வழங்கியதாக வெளியில் பலரும் பேசிக் கொள்கின்றார்கள்.
இஸ்லாமிய அகீதாவிற்கு முற்றிலும் மாறுபட்ட கொள்கையுடைய இந்த ஷீயாக்களின் ஒன்று கூடலுக்கான ஏற்பாடுகளை புதிய காத்தான்குடியை சேர்ந்த ஒரு கிராம சேவை உத்தியோகத்தர் முன்னின்று மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு புதிய காத்தான்குடியில் உள்ள ஓர் ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவர் தடல்புடல்லாக நின்று செயல் பட்டதாகவும் ஆரம்ப கட்ட புலனாய்வில் தெரிய வந்தள்ளது.
மேலும் இப்படிப்பட்ட ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவர் உட்பட ஏனையவர்களை உடன் விசாரித்து தகுந்த பாடம் கற்பிக்க ஊர் தலைமைகள் முன்வர வேண்டும் என இளைஞா்கள் பலர் ஆவேசத்துடன் பேசியதாகவும் தகவல்.
Published by

Leave a reply to Issadeen Cancel reply