PMGGயின் செயற்குழு உறுப்பினர்களின் ஒன்றுகூடல்

pmgg– ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று நேற்று இரவு கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் மக்கள் அரங்கில் இடம்பெற்றது. முன்னாள் நகரசபை உறுப்பினரும் சூறாசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM. சபீல் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருமளவிலான PMGGயின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சூறாசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடபிலும் அதற்காக நாம் எல்லோரும் ஆற்றவேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் அதன் சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் விரிவாக விளக்கமளித்தார்.

அத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட செயற்குழு உறுப்பினர்களும் தமது கருத்துக்களை முன்வைத்ததுடன் இறுதியில் பரஸ்பர கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

pmgg

pmgg

pmgg

Published by

Leave a comment