மட்டக்களப்பு: பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்தினால் நிர்கதியாகியுள்ள மக்களுக்கு வழங்குவதற்கேன மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் சுமார் 1 ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அன்பளிப்பு செய்யப்பட்ட 1 ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 1-11- நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது குறித்த நிவாரண பொருட்கள் மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவரும்,சமூக சேவையாளரும்,மட்டு-பிலால் எம்போரியத்தின் உரிமையாளருமான கே.எம்.எம்.கலீல் தலைமையிலான இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் பிரதிநிதிகளால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந் நிவாரண பொருட்களில் பெட்சீட், டவல் உட்பட உலர் உணவுப் பொதிகள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment