டெஸ்ட் போட்டியில் வேகச்சதம் சாதனையை சமன்செய்தார் மிஸ்பாஉல் ஹக்!
– MJ
அபுதாபி: அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் அபுதாபியில் இடம்பெற்றுவரும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஉல் ஹக், டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக வேகச் சத சாதனையை சமன் செய்துள்ளார்.
1986ம் ஆண்டு அண்டிகுவாவில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின்போது மேற்கிந்திய அணித் தலைவர் விவியன் ரிச்சர்ட்ஸ் 56 பந்துகளுக்கு சதத்தைப் பெற்றிருந்தார். டெஸ்ட் வரலாற்றில் 1986 இற்குப் பின்னர் அதாவது கடந்த 28 வருடங்களாக இச்சாதனை முறியடிக்கப்படவில்லை. ஆனால் இச்சாதனையை மிஸ்பாஉல் ஹக் நேற்றைய ஆட்டத்தின்போது சமன் செய்திருக்கின்றார். இச்சதத்தில் 11 நான்கு ஓட்டங்களும், 5 ஆறு ஓட்டங்களும் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.MJ
மகிழ்ச்சியில் மிஸ்பாஹ்…
அதுமாத்திரமன்றி, இரு சதங்களை ஒரே டெஸ்ட்டில் பெற்ற ஒரே இரு வீரர்கள் என்ற சாதனையும் இப்போட்டியில் சமன் செய்யப்பட்டிருக்கின்றது. மிஸ்பாஉல் ஹக் மற்றும் அஸார் அலி ஆகிய இரு வீரர்களும் குறித்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலும், இரண்டாவது இனிங்ஸிலும் சதங்களைப் பெற்றனர். இதற்கு முன்னர் 1974ம் ஆண்டு நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களான கிரேக் மற்றும் இயன் சப்பல் ஆகியோர் அடுத்தடுத்து சதங்களைப் பெற்றிருந்தனர். 40 வருடத்திற்குப் பின்னர் இச்சாதனையும் நேற்றைய ஆட்டத்தின்போது சமன் செய்யப்பட்டிருக்கின்றது.
அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணி பலவாறாக விமர்சிக்கப்பட்டும் மற்றும் நம்பிக்கை சுழல்பந்து வீச்சாளர் சஹீட் அஜ்மல் இடைநிறுத்தப்பட்டும் இருக்கும் இக்கட்டான இத்தருணத்தில், பாகிஸ்தானின் இத்தகைய ஆட்டம், அதுவும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம் உலக கிரிக்கட் இரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment