ஈரானில் கரப்பந்தாட்ட போட்டியை பார்க்கச்சென்ற பெண்ணுக்கு சிறை

iranதெஹ்ரான்: ஈரானில் ஆடவர் கரப்பந்தாட்ட போட்டி ஒன்றை பார்க்க முயன்று கைதுசெய்யப்பட்ட பிரிட்டன்-ஈரான் பெண் ஒருவருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “நீதிமன்ற தீர்ப்பின்படி அவருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது” என்று 25 வயதான கோனா கவாமி என்ற குறித்த பெண்ணின் வழக்கறிஞர் ஈரான் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

ஈரான்-இத்தாலி அணிகளுக்கு இடையில் டெஹ்ரானில் ஜூனில் நடந்த கரப்பந்தாட்ட போட்டியை பார்க்க அரங்குக்குள் செல்ல முயன்றபோதே கோனா கவாமி கைதுசெய்யப்பட்டார்.

எனினும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாகவும் கரப்பந்தாட்ட போட்டியுடன் தொடர்பு இல்லை என்றும் ஈரான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆடவர் போட்டிகளை பார்வையிடுவதற்கு ஈரானில் பெண்களுக்கு தடை இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆண் ரசிகர்களின் கீழ்த்தரமான நடத்தையில் இருந்து பாதுகாக்கவே இந்த தடை நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

iran
கோனா கவாமி

Published by

Leave a comment