பதுறியா ஹெபி கிட்ஸ் பாலர் பாடசாலையின் 23வது வருடாந்த விளையாட்டு போட்டி

kids– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் பதுறியா ஹெபி கிட்ஸ் பாலர் பாடசாலையின் 23வது வருடாந்த விளையாட்டு போட்டி 31-10-2014 வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி பதுறியா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. பதுறியா விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.எச்.எம்.அக்ரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது பாலர் விளையாட்டுக்களில் பங்குபற்றிய பாலர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அதிதிகளினால் விருதும்,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.அலி சப்ரி, எம்.எஸ்.எம்.சியாத், எம்.எம்.எம்.ஜனூப் , காத்தான்குடி மின்சார சபையின் பொறியியலாளர் எம்.ஏ.சீ.எம்.நௌபல் உட்பட ஊர் பிரமுகர்கள், பதுறியா விளையாட்டு கழகத்தின் பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு பாலர் விளையாட்டுக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

kids

prize

kids (2)

Published by

Leave a comment