தொழிநுட்ப உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

sports (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் 6 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் ,பள்ளிவாயல்கள் உட்பட 10 அமைப்புக்களுக்கும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவுக்கும் தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்பளிப்பு செய்யப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொழிநுட்ப உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் உட்பட மற்றைய உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு  30-10-2014 நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சமூக சேவை நிறுவனங்கள் ,பள்ளிவாயல்கள் ஆகியவற்றுக்கு தேவையான உபகரணங்கள் அதன் தலைவர்களிடம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கருநாகரன் , சிறிலங்கா ஹிறா பௌண்டேசன் நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பீ.ரீ.எம்.பாரூக், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

sports (2)

sports

atham lebbe alim

kattankudy

Published by

Leave a comment