காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின்- 2014 விருது வழங்கும் விழா

balika (4)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் -2014 விருது வழங்கும் விழா 30-10-2014 நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்,க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவிகள்,விடுமுறை எடுக்காமல் பாடசாலைக்கு வருகைதந்த ஆசிரிய,ஆசிரியர்கள் ஆகியோர் பிரதம அதிதி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் பரிசும்,பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் இப் பாடசாலையில் அதிபர்களாக கடமையாற்றிய அதிபர்கள் உட்பட தற்போதய அதிபர் ஆகியோர் அதிதிகளிளால் பொன்னாடை போர்த்தப்பட்டு பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெவ்வை, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெப்பை, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் ஐ.எம்.இப்றாஹீம் , காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், காத்தான்குடி நகர சபையின் பிரதி நகர முதலவர் எம்.ஐ.எம்.ஜெஸீம் ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,ஆசியரிய ஆசிரியர்கள், உலமாக்கள் ,புத்திஜீவிகள்,மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவிகளின் ஆற்றல்கலை பிரதிபலிக்கும் பல்வேறு கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment