கவிஞர் ரீ.எல். ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என் வானமும் கவிதை நூல் வெளியீட்டு விழா

jawfer khan (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: சிரேஷ்ட ஊடகவியலாளரும்,தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல். ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என் வானமும் கவிதை நூல் வெளியீட்டு விழா 31-10-2014 நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரி அர்ராஷித் மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது முறிந்த சிறகும் என் வானமும் கவிதை நூலின் முதன்மை பிரதி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஈஸ்ட் லகூன் ஹோட்டல் உரிமையாளரும்,பிரபல தொழிலதிபருமான எம். செல்வராசாவுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் நூலின் பிரதம பிரதி மட்டக்களப்பு மெக்ஸல் ஹாட்வெயார் உரிமையாளரும், தொழிலதிபருமான ஏ.எல்.எம்.மீராசாஹிபுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

jawfer khan (2)

இங்கு மட்டக்களப்பு லயன்ஸ் கழக பிரதிநிதி அ.செல்வேந்திரனினால் சிரேஷ்ட ஊடகவியலாளரும்,தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கானுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.

இதில் நூல் நயவுரையை கவிஞர் பாலமுனை பாறூக் நிகழ்த்தியதோடு நூலாசிரியர் அறிமுகத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் நிகழ்த்தினார்.

jawfer khan

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிபலி பாரூக்,கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர்,காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் செயலாளர் கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி), சிறிலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி),காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களின் தலைவர்கள், கல்வியலாலர்கள்,உலமாக்கள்,கவிஞர்கள்,ஊடகவியலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

jawferkhan

Published by

Leave a comment