ஒரு கிலோ எடையைக் குறைத்தால் ஒரு கிராம் தங்கத்தை பரிசாக அள்ளிக்கொடுக்கும் டுபாய் அரசு!

gold coins– AF- 90

டுபாய்: டுபாயில் ஒரு கிலோ எடை குறைத்தால் ஒரு கிராம் தங்க காசு வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அளவுக்கு அதிகமாக உடல் குண்டாகி அவதிக்குள்ளாவதை தவிர்க்கும் வகையில் உடல் பருமனை குறைப்பவர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு டுபாய் அரசு அறிமுகம் செய்தது. அதன்படி,  ஒரு கிலோ எடையை குறைத்தால் 1 கிராம் தங்க காசு பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த வருடம் 13 வயதுகுட்பட்ட குழந்தைகளும்,  குடும்பத்தினர்களும் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு இந்த திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் குறைந்த பட்சம் 2 கிலோ உடல் எடையை குறைத்தால் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த வருடம் குழந்தைகள் ஒரு கிலோ எடையை குறைத்தால் 2 கிராம் தங்கம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 7,350 பேர் பரிசு பெற தகுதி பெற்றுள்ளனர். இதில் 200 பேர் குழந்தைகள் ஆவர். சுமார் 40 கிலோ வரை தங்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது. பரிசளிப்பு விழா வரும் டிசம்பரில் நடக்க உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

gold coins

Published by

Leave a comment