வேர்ஜினியா: விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்காவின் அண்டாரிஸ் எனும் ரொக்கட், ஏவப்பட்ட 6வது வினாடியில் வானுக்கும் பூமிக்குமிடையில் வெடித்துச் சிதறியது. அமெரிக்காவின் வேர்ஜினியா விண்வெளி விஞ்ஞானத் தளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டிருந்த இந்த ஏவுகணையே வெற்றயளிக்காமல் சிதறி வெடித்துள்ளது.
குறித்த ஏவுகணை 2200 கி.கி. நிறையுடையது எனவும், ஏவுகணை வெடித்துச் சிதறியதன் காரணத்தை தாங்கள் விரைவில் கண்டுபிடித்து அறிவிப்போம் எனவும் வேர்ஜினியா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
1.9 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்ட இவ் ஏவுகணை இன்று (US Date: 28-10-2014) விண்ணுக்கு ஏவப்பட்ட 6வது விநாடியில் வெடித்துச் சிதறியமை அமெரிக்காவிற்கு தாங்க முடியாத தோல்விகளில் ஒன்றாக அமைகிறது.
Published by




Leave a comment