ரீ.எல்.ஜவ்பர்கான் எழுதிய “முறிந்த சிறகும் என் வானமும்” நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லுாரி மண்டபத்தில்…

– டீன் பைரூஸ்

jawfar jawfer khanகாத்தான்குடி: சிரேஷ்ட ஊடகவியலாளரும்,தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற காத்தான்குடி கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் jp எழுதிய  “ முறிந்த சிறகும் என் வானமும்” நூல் வெளியீட்டு விழா (31.10.2014 வெள்ளிக்கிழமை) பி.ப.04.00 மணிக்கு  காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லுாரி மண்டபத்தினில் மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா MA/MP  அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

கவிஞர்  ரீ.எல்.ஜவ்பர்கானின் முறிந்த சிறகும் என் வானமும்  என்னும் மேற்படி   நூல் வெளியீட்டு விழாவிற்கு பல அரசியல் தலைமைகள், முன்னால்,இன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள்,கல்விமான்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,நகர முதல்வர்கள், நகர சபை உறுப்பினரக்ள்,அதிபர்கள்,ஆசியர்கள்,கவிஞர் பெருமக்கள் என ஏராளமான அதிதிகளால் அவை அலங்கரிக்கப்பட உள்ளது விசேட அம்சமாகும்.

book-2-cover

Published by

Leave a comment