மியூனிக்: பீபா-2022 உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பு கட்டாருக்கு வழங்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் இவ்வுலகக்கிண்ணம் சர்ச்சையில்தான் இருந்து வருகின்றது. ஜூன், ஜூலை மாதங்களிலிலேயே பீபா உலகக் கிண்ணப்போட்டிகள் உலகில் இடம்பெற்று வருவது வழமை.
இதனடிப்படையில் கட்டாரில் இடம்பெறும் உலகக் கிண்ணப் போட்டிகள் ஜூன், ஜூலை மாதத்தில் இடம்பெற்றால், மத்திய கிழக்கு காலநிலை இக்காலத்தில் 45-50 செல்சியஸ் வரையான வெப்பம் நிலவக்கூடியதாக இருக்கும். எனவே, ஐரோப்பிய அணி வீரர்கள் வெப்பத்தால் வீழ்ந்து விடுவர் என்ற அச்சம் கடந்த வருடம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அதுமாத்திரமன்றி, கட்டார் உலகக் கிண்ணப் போட்டியை நடாத்துவதற்கு லஞ்சம் கொடுத்ததாகவும் செய்திகள் கசிந்திருந்தன.
இந்நிலையில், உலகின் பிரபல்ய உதைப்பந்தாட்டக் கழகங்களில் ஒன்றான ஜேர்மனியின் பேயர்ன் மியூனிக் கழகத்தின் சிரேஷ்ட நிர்வாகி கார்ள் கெய்ன்ஸ் “கட்டார் உலகக் கிண்ணப்போட்டிகளை நடாத்துமானால் அது ஏப்ரல் மாதத்தில் நடாத்தப்பட வேண்டும்” என ஓர் புதிய வேண்டுகோளை விடுத்திருக்கின்றார். இந்த வேண்டுகோளை எதிர்வரும் திங்கட்கிழமை சூரிச் நகரில் இடம்பெறும் பீபா கூட்டத்தில் தான் விடுவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக கட்டார் உலகக் கிண்ண 2022 அமைப்பு எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
![qatar-2022-worldcup-logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/qatar-2022-worldcup-logo1.jpg?w=109&h=150)
![_70130202_qatar_getty3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/70130202_qatar_getty31.jpg?w=300&h=174)

Leave a comment