கொழும்பு: இன்று இனவாதம் என்பது ஒரு அணிகளனாக மாறிவிட்டது என்பது ஆச்சரியத்திற்குள்ளான விடயமல்ல.ஒரு சிலர் மேற்கொண்டுவரும் இந்த செயற்பாடுகள் காரணமாக சகலரையும் அந்த கூடைக்குள் வைத்து மதிப்பிடுவது அவ்வளவு பொருத்தமானதொன்றல்ல.
இலங்கையில் அண்மை காலமாக சூறாவளி போன்று ஆரம்பித்த பொது பலசேனாவின் அடக்கு வாரங்கள் இன்று ஓரளவு குறைந்திருப்பதையும்,அவ்வப்போது வலுவிழந்து போகும் போது தனக்கு தாமாகவே ஊக்கமருந்து கொடுப்பது போன்று சில சம்பவங்களும் அவர்களால் அரங்கேற்றப்பட்டு கொண்டுவருவதையும் காணமுடிகின்றது.
இவ்வாறு அண்மைக்கால எழுத்து மூலமான அறிக்கைகளை பதிவுகளாக பாரக்கின்ற போது அவைகள் அடக்கி வாசிக்கப்பட்டிருப்தையே அதிகமாக காணமுடிகின்றது.இவ்வாறு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஏனைய நேர்மையினையும்,நியாயத்தையும் ஏற்றுக் கொள்ளும் மக்கள் வாழும் சமூகஙகளிலும் அதற்கு எதிராக பல ஏவல்கள் இடம் பெற்றதையும் நாம் பாரக்க வேண்டும்.
குறிப்பாக பொதுபலசேனாவின் இலக்கு என்பதை அறிந்து கொள்ள முடியுமாக இருந்தாலும்,அதனது செயற்பாடுகளுக்கு எதிராக எமது தலைமைக் அவ்வப்போது கடும் தொணியில் செயற்பட்டதனால் அதனைது வளர்ச்சியினை கட்டுக் கோப்புக்குள் கொண்டுவர முடிந்த செய்தியினையும் நாம் கேட்டுத்தான் வந்துள்ளோம்.
குற்றச்சாட்டுக்கள் ஒரு புறம் இருக்க இந்த பொதுபலசேனாவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வியூகங்களை காட்டிக் கொடுப்பு செய்வதிலும்,பொதுபலசேனாவுக்கு எதிராக உதவும் சக்திகளை பகிரங்கமாக விமர்சிப்பதிலும் எம்மை மிஞ்சியவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது.சுந்திரம்,ஜனநாயகம் என்பன எமக்கு கிடைக்கெப் பெற்றுள்ளது என்பதற்காக அதனை துவம்சம் செய்து வேறு மக்கள் அதனை அனுபவிக்க விடாமல் தடுப்பது என்பது எந்தளவுக்கு நியாயத்தின் வடிவில் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு விடயம் தான்.அதே போல் எமது சமூகத்திற்கு எதிராக வருகின்ற சவால்களை முறியடிக்க சாமர்த்தியமான தலைமைத்துவங்களையும் நாம் உருவாக்கமல் இருக்க முடியாது.
இன்றை தேசத்தினை பொருத்த வரையில் பலமும்,பலவீனமும் அரசியலில் உள்ளது என பெரியவர்கள் பேச நாம் கேள்சிபடுகின்றோம்.பலம் எது பலவீனம் எது என்பது தொடர்பில் ஆராய்வதறங்கு மற்றுக் ஒரு சந்தர்ப்பத்தழைத நாம் தெரிவு செய்வது சிறந்ததாகும்.இருந்த போதம் பலவீனத்தை விட தமது பலம் என்பதை அறிந்து கொள்ள சிறு முயற்சியினை ஒவ்வொரு வாசகனும் முன்வரவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
யாணைியின் பலம் எதில் இருக்கின்றது என்று கேட்டால் ஒவ்வொரு பதிலை ஒவ்வொருவரும் சொல்லுவார்கள் அத அவர்களது பார்வை,சிந்தனை ,அனுபவம் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.எழுந்தமான பதிலாக யாணையின் பலம் அதனது தும்பிக்கையில் உள்ளது என்றே சொல்லுவர்.அதே போல் தான் எமது செயற்பாடுகள் நம்பிக்கையின் மீது உள்ளதாகும்.இந்த நம்பிக்கையினை எவ்வாறு நோக்கலாம் என்பதற்கான பதிலுக்காகவும் ஒவ்வொரு வாசகரிடமே விட்டுவிடுவோம்.
இவ்வாறான ஒரு நிலையில் அண்மையக் காலமாக எமது தேசத்தில் பொதுபலசேனா மேற்கொண்ட விசமத்தனமான பிரசாரங்களில் ஒன்றாக வடக்கில் முஸ்லிம் கொலணி அமைக்கப்படுகின்றது.அதற்காக முஸ்லிம் அமைச்சர் ஒருவர் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அரச காணியினை கைப்பற்றியுள்ளார்.என மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் கட்டுக்கடங்காதவை.இந்த பொபலசேனாவின் பிரசாரத்துக்குள் சில குள்ள நரிகளும் புகுந்து கொண்டு அன்று வடக்கில் முஸ்லிம்களின் தடையங்களே இருக்கக் கூடாது,உடுத்திய ஊடையுடன் வெளியேற்றினரே.அவர்ளின் இயக்கத்தறிகான மத,இனவாததி்களும் முகம் புதைத்து கொண்டனர்.தேவையான தரவுகளை பிழையான முறையில் வழங்கி வடக்கில் ஒரு பாரிய அபகரிப்பு இடம் பெறுவதாக சர்வதேசத்திலும்,உள்ளுரிலும் அபத்தமான பிரசாரங்களை ஓயாது செய்துவந்தனர்.
1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் அகதி முகாம்களில் அல்லுற்றுக் கொண்டிருந்த போது,இறுதி யுத்தத்தின் போது தற்காலிக இடம் பெயர்வுக்குள்ளான எமது தமிழ் சகோதரர்களை மீள்குடியேற்றம் செய்து அவர்களை பெரும் இழைப்புக்களிலிருந்து பாதுகாத்தது இந்த அரசும்,அப்போது மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த வன்னி மாவட்ட மூவின மக்களின் வாக்குகளாலும் தெரிவு செய்யப்பட்ட றிசாத் பதியுதீன் என்பதும் வரைலாற்று பதிவாகும்.அன்று தமிழ் துரிதமாக மீள்குடியேற்றம் செய்ததை வெகுவாகப் பாபாராட்டியவர்கள் இன்று இந்த முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீள்குடியேற்றத்திற்கு வருகின்ற போது அதனை இனவாத ரீதியில் சித்தரித்து அதற்கு எதிராக போராட்டங்களையும்,மதத் தளங்களை பயன்படுத்தி அராதனைகள்,என்றும் அரசியல் கட்சிகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் அனைத்து நன்மைகளை முடக்கும் அநியாயத்தையும் செய்தே வருகின்றனர்.
மழை பெய்தாலும் துாவானம் நிற்காத கதைப் போன்று நிறுவனங்களுக்குள்ளும், இனவாத உயர் பதவி நிலையில் உள்ளவர்களின் உள்ளங்களின் ஊண்டு ஆழமாக விதைக்கப்பட்டுள்ள உண்மையினையும் எமது மக்கள் அறியாமல் இல்லை.விட்டுக் கொடுப்பு என்பது எமது சொத்தாகும் அதன் மூலம் சமூக இ.ன மத ஒற்றுமைகள் ஏற்பட் வேண்டும் என்பதற்காகவும் இழப்புக்களுக்கு மேல் இழப்புக்களை வட புல முஸ்லிம்கள் தினந்தோறும் அனுபவித்தே வருகின்றனர்.
இது புறம் இருக்க பொதுபலசோன அமைப்பும்,வடக்கில் உள்ள இனவாத சிந்தணைக் கொண்டவர்களும்,வடக்கில் முஸ்லிம் தலைமைகளின் செயற்பாட்டுக்கு தொடராக இடைஞ்சல் கொடுத்துவருகின்றனர்.அதில் ஒன்றாகவே வில்பத்து சரணாயத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் பலாத்காரமாக அபகரித்து முஸ்லிம்களை குடியமர்த்தி முஸ்லிம் வலயத்தினை உருவாக்குவதாக பெரும் பிரசாரங்களை மேற்கொண்டனர்.இதன் போது இநட்த அமைப்புக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மற்றும் நியாயத்தின் அடிப்படையில் செயற்படும் அரச அதிகாரிகள் ஒன்றினைந்து இது முற்றிலும் பிழையானது.தற்போது வடக்கில் இரானுவத்தினரின் பிரசன்னம் இருக்கின்ற போது ஒரு சமூகத்திற்காக அரச காணிகள் கையகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கும் கருத்துக்களில் உண்மை இல்லை என்பதை தெளிவுபடுத்தும் முயற்சிகளும் முன்டுக்கப்பட்டன.மக்களுக்கான இந்திய வீடமைப்பு திட்டத்தை வன்னி மாவட்டத்தில் நடை முறைப்படுத்த அரசுடனும்,இந்திய துாதரக அதிகாரிகளுடனும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பல சுற்று பேச்சுக்களை நடத்திய போது அதிலும் இந்த இனவாதிகள்,கட்சி அரசியலே தஞ்சம் என்று மண்டியிட்டுக் கிடக்கும் ஆயத குழுக்களில் இருந்த அரசியல் வாதிகளும்,வீதிகளிலும்,ஊடக ங்களிலும் (அவர்கள் சார்பு இனவாத தமிழ்)கொட்டை எழுத்துக்களில் அமைச்சர் றிசாத் ஒரு இனவாதி என்று முத்திரை குத்தினர்.
இந்த அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சராக இருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தான் சார்ந்த மாவட்ட மக்களை மீள்குடியேற்றம் செய்ய முடியாமல் கைவிலங்கு இடப்பட்ட நிலையில் இருந்ததையும் மக்கள் அறிந்திருப்பார்கள்.இந்திய வீடமைப்பு திட்டம் தவிர பல அரசார்பற்ற நிறுவனங்கள் தமிழ்“ மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களை வழங்க முன்வநதன.அதற்கான அங்கீகாரத்தை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் எவ்வித இனச்சாய சந்தனைகளும் அற்ற நிலையில் அதற்கான அனுமதியினை வழங்கி தமிழ் மக்களை தமது சகோதர சமூகமாக பார்த்ததையும் நாம் இந்த வேளையில் நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.ஆனால் சில அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் சில வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்த போது அதனை பிரதேச வாதமாக ,அமைச்சர் றிசாத் முஸ்லிம்களுக்கே எல்லாவற்றையும் செய்வதாக பொருக்க முடியாது புனையப்பட்ட கதைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று இந்த வீடுகள் கிடைப்பதை தாமதப்படுத்தியதுடன்,உரிய துாதரகங்களுக்கு சென்று பிழையான தரவுகளை காண்பித்து தமிழர்களின் பூமியை முஸ்லிம் ஆக்கிரமிப்பு செய்கின்றார்கள் என்ற நியாயமற்ற வாதத்தை பேசினர்.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்திடம் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது படபுல முஸ்லிம்கள் சார்பில் கடுமையான வேண்டுகோளினை முன் வைத்தார்.பாதிக்கப்பட்ட எந்த சமூகமாக இருந்தாலும் அவர்களுக்கு நியாயமான முறையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.இல்லாவிட்டால் அந்த சமூகத்தின் பிரதி நிதி என்ற நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற அபய ஒலியிரைன எழுப்பினர்.அப்போது அரசும்,ஏனைய அமைப்புக்களும் தமது காதுகளை நீள நீட்டின கண்களை அஅகல விரித்தன.
இருப்பினும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று பழைய நிலையக்கு சில தினங்களுக்குப் பின்னர் சென்றுவிட்டது.அரசியல் என்பது மக்களுக்கான அபிவிருத்திகளை கொண்டுவரும் என்று என்று வரைவிலக்கணம் எழதப்பட்டிருந்த போதும்,அமைச்சர் றிசாத் பதியுதீனை பொறுத்த வரையில் இது போரட்டம் நிறைந்த ஒன்றாகவே இருந்துவருகின்றது.
இந்த நிலையில் அண்மையில் மன்னாருக்கு விஜயம் செய்த அமைச்சரும்,ஜனாதிபதியின் சகோதரருமான பஷில் ராஜபக்ஷ அவர்கள் மன்னார் புதுக்குடியிறுப்பில் வைத்து தெரிவித்த கருத்து பாரக்கப்பட வேண்டியது.அமைச்சர் றிசாத் பதியுதீன் எஎன்பவர் ஒரு இனவாதி அல்ல,அவர் ஒரு நேர்மையான அரசியல் வாதி,அவர் தமிழர்களுக்கு அது போன்று முஸ்லிம்களுக்கும்,சநிங்களவர்களுக்கும் பற்றியுள்ளார்.பயிசெய்துவருகின்றார்.அவர் மெனிக் பார்ம்மில் இருந்த 3 இலட்சம் தமிழர்களை அவர்களது இடங்களில் குடியமர்த்தி பாராட்டை பெற்ற ஒருவர்.அஅவரும் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட ஒருவர்,அவர் சார்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கின்ற போது இனவாதத்தையும்,அரசாங்கத்தின் அபிவிருத்திகளை தாங்கி கொள்ள முடியாத சக்திகள் பொய்யான செய்திகளை சில ஆங்கில மற்றும் ஏனைய ஊடகங்கள் மூலம் வெளியிடுவதை அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில் கடுமையாக கண்டிக்கின்றே.ன்.
வடக்கில் முஸ்லிம் அமைப்பதாக கடும் போக்கு சிங்கள அமைப்புக்களும்,ஒத்து ஊதும் சில மதவாத பிற்போக்கு சக்திகளும் அகூக்குரலிடுகின்றனர்.அது பொய்யானது என்பதை இந்த இடத்தில் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன்.இந்த முஸ்லிம்களை நான் வீரர்களாக பார்க்கின்றேளன்.இவர்கள் அன்று வெளியேற்றப்பட்டு சில வருடங்களில் துணிச்சலுடன் வந்து புதுக்குடியிறுப்பு கிராமத்தில் குடியேறினர்.
வடக்கில் மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் அனைத்துவிதமான வசதிகளையும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செய்து கொடுக்க கடமைப்பட்டுள்ளது.அமைச்சர் றிசாத் பதியுதீன் இம்மக்களுக்கு எதை பெற்றுக் கொடுக்க விரும்பினாலும் அதற்கு நாம் துணையாக இருப்போம் என்பதை பகிரங்கமாக இங்கு தெரிவித்தார் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ,இன்று பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புக்கள் எவ்வளவு சத்தம் போட்டாலும் வடக்கில் அரசாங்கம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை செய்யும்,அவர்களது மண்ணில் அவர்களை வாழ வைப்பதற்கு என்ன தேவையோ அதனை செய்யும் உறுதி பாட்டை அமைச்சர் பஷில் கொண்டுள்ளதுடன் அதனை பகிரங்கப்புடுத்தியதையும் நாம் சிந்தணைக்கு உள்வாங்க வேண்டும்.
இனவாத்,பிரதேச வாதம் என்று பேசி பேசி இழழந்து பொனது ஏராளம்.கிடைக்கின்றவை மக்களுக்கு அதன் மூலம் அம்மக்கள் நிம்மதியாக வாழுவார்கள் என்றால் அது தானள் எமது நோக்கமுமாகும்.இதனை முன்னெடுத்து செல்லும் பணியில் அமைச்சர் றிசாத் பயணிக்கின்றார் என்றால் அவருடன் இணைந்து மக்களுக்கு நன்மையிரைன பெற்றுக் கொடுப்பதுடன்.நாமும் சமூகத்திற்கு நன்மை செய்தவர்காளக மாறமுடியும்.
Published by





Leave a comment