கொழும்பு: இலங்கை கிரிக்கட் மகளிர் அணிக்கு, ஆட்களைத் தெரிவுசெய்யும்போது, பாலியல் லஞ்சம் கோரப்பட்டதாகவும், இதற்கு சம்மதிக்கும் மகளிரே, அணிக்குத் தெரிவுசெய்யப்பட்டு, தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதாக கொழும்பு ஊடகங்கள் தற்பொழுது இவ்விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளன.
மகளிர் கிரிக்கட் அணியின் முகாமையாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர்களை பாலியல் லஞ்சம் மூலமாகத் திருப்திப்படுத்தினால் மாத்திரமே, புதியவர்கள் அணிக்குள் சேர்த்துக்கொள்ளப்படுவர். அதேபோல், பழைய வீரர்கள் தங்களது இடத்தை மேலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின் பாலியல் விடயத்தில் தேர்வாளர்களிடம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை மென்மேலும் கண்டறிந்து விசாரிப்பதற்காக இலங்கை கிரிக்கட் எதிர்வரும் வியாழக்கிழமை அவசரக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது. இக்கூட்டத்தில் இலங்கை கிரிக்கட் உப தலைவர் மொகான் டி. சில்வா, செயலாளர் நிஷாந்த ரணதுங்க, உப செயலாளர் ஹிரந்த பெரேரா மற்றும் இலங்கை கிரிக்கட் (ஆண்) சிரேஷ்ட தேர்வாளர் சனத் ஜயசூரியா ஆகியோர் கலந்துகொண்டு இவ்விடயத்தை ஆராய்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by



Leave a comment