மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும உத்தியோக்த்தர் சங்க பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்ட மகஜர்

batticaloa (2)– எம்.எச்.எம். அன்வர்

மட்டக்களப்பு: வென்றெடுத்த சுதந்திரத்தினைப் பாதுகாப்போம் – எமது உரிமைகளைக்காத்திடுவோம் எனும் தலைப்பிலான ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது பல தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் தேவைகளை முன்வைத்தனர் இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும உத்தியோக்த்தர் சங்க பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்ட மகஜர். 

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கப்பிரிவினால் 25.10.2014ம் திகதியன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற தொழிற்சங்க பொதுக்கூட்டத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கையளிக்கப்பட்ட மகஜர்.

அன்புடையீர்

வறுமை தணிப்பை நோக்காகக்கொண்டு 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘சமுர்த்தி’ எனும் சுபீட்சத்திட்டமானது சுமார் 2 தசாப்தங்களை தொடும் நிலையில் தற்போது வறுமை ஒழிப்பு வீதம் 7மூ ஆக குறைவடைவதற்கு திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.

மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் பொறுத்தவரை 1997,1998 காலப்பகுதியிலிருந்தே நியமனங்கள் கிடைக்கப்பெற்று 1999.12.01 திகதி தொடக்கம் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

நிக நவக பெற்றுவந்த உத்தியோகத்தர்களை திவிநெகும திணைக்கள அரச சேவைக்குள் உள்வாங்கி அதற்கான வேலைத்திட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் இதற்கு உதவிபுரிந்த அதிமேதகு ஜனாதிபதி,அமைச்சர்கள், அரச உயர் அதிகாரிகள்,திணைக்களத் தலைவர்கள் மற்றும் சமுர்த்தி ஊழியர் சங்கங்கள் அனைவரினதும் மிகுந்த அர்ப்பணிப்பின் காரணமாகவே இவ்வேலைத்திட்டங்கள் இடம்பெறுவதோடு இதற்காக எமது மட்டக்களப்பு மாவட்ட அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 

624 திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமைபுரியும் இம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்வரும் பிரச்சினைகள் தேவைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம் அவைகளாவன,

batticaloa (2)

1. மட்டக்களப்பு திருகோணமலை பொலந்நறுவை மற்றும் அனுராதபுர மாவட்டங்களுக்கான திவிநெகும வலயக்காரியாலயம் தற்போது அனுராதபுரத்தில் அமையப்பெற்றுள்ளதாலும்; மட்டக்களப்பைச்சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு மிகத்தொலைவில் காணப்படுவதாலும் அலுவலக நடவடிக்கை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.ஆகவே இதற்கு பொருத்தமாக பொலநறுவை அல்லது திருகோணமலைக்கு இக்காரியாலயத்தினை மாற்றித்தரல். 

2. திவிநெகும திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான 4 தெரிவுகள் வழங்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இவர்களுக்கான நிக நவக இன்னும் கிடைக்கவில்லை அவற்றினை துரிதமாக கிடைக்க வழி செய்தல்.

3. தற்போது கடமைபுரியும் பிரதேசங்களில் பதில் கடமை புரியும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பதில் சம்பளம் கிடைப்பதில்லை.

4. மட்டக்களப்பு மாவட்டத்தில் திவினெகும தி;ணைக்களம் ஆரம்பிக்கப்பட முன்னரும் அதன் பிற்பாடும் அதிகமான ஆளணி வெற்றிடம் காணப்படுகிறது. இதனை விரைவாக தீர்த்து வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சி எடுத்தல்

5. ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்களைப்போன்று திவிநெகும உத்தியோகத்தர்களுக்கான காகிதாதிகள் கொடுப்பனவு அதிகரித்தல் போக்குவரத்துக்கொடுப்பனவான ரூ.400.00 ஐ மேலும் அதிகரித்தல்; அலுவலக(பிரிவுக்கரியாலயம்) வாடகை வழங்கப்படல் சீருடை மற்றும் புகையிரத ஆணைச்சீட்டு என்பன துரிதமாக கிடைக்க வழிசெய்தல்.

6. நுகர்வுக்கடன் மற்றும் 10 மாதக்கடன் வழங்குதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக மந்த கதியிலேயே காணப்படுவதால் அவற்றினை துரிதமாக கிடைக்க வழிசெய்தல்.

7. தற்போது சமுர்த்தி மாதாந்த கொடுப்பனவு காசு மற்றும் ஏனைய அரச கொடுப்பனவுகள் திவிநெகும வங்கிச் சங்கங்களிலேயே வழங்கப்படுவதால் வங்கிகளில் ஆளணிப் பற்றாக்குறைகளை நீக்குவதுடன் மற்றய அரச வங்கி ஊழியர்களைப்போன்று வேதன சலுகைகள் மற்றும் மேலதிக வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும். (இதனால் உத்தியோகத்தர்கள் மன உளைச்சலுக்குள்ளாகின்றனர்).

8. திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கல்வி திறமை சேவைமூப்பு என்பவற்றை வைத்து பதவியுயர்வுகள் மற்றும் முகாமையாளர் நியமனங்கள் வழங்குதல் வேண்டும். (இது தற்போது பட்டதாரிகளுக்கே வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது).

9. அதிமேதகு ஐனாதிபதி அவர்களின் கூற்றுக்கிணங்க தீர்வையில்லா மோட்டார் சைக்கிள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இதுவரையிலும் (25.10.2014) கிடைக்கவில்லை அவற்றினை கிடைக்க வழிசெய்தல்.

மேற்படி விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவிப்பதுடன் இவற்றினை செயற்படுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

தலைவர்/செயலாளர்
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்
மட்டக்களப்பு மாவட்டம்

Published by

Leave a comment