காத்தான்குடி: காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயலில் கடந்த 25-10-2014 சனிக்கிழமை இரவு நடாத்தப்பட்ட ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்றுகூடல் மற்றும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வு தொடர்பில் காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளரினால் 28-10-2014 திகதியிட்டு சமூக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அது தொடர்பில் மறுப்பு ஒன்றும் வெளியாகி உள்ளது யாவரும் அறிவீர்கள்.
இந்த அறிக்கையில், செயலாளர் இப்பெறுமதியான நிகழ்வு தளம்பல் நிலையை அடையாதிருக்க செயலாளர் நிதானமாக மிகக் கச்சிதமாக இந்த விடயத்தை கையாண்டு ஒரு பொறிமுறைக்குள் உட்படுத்தி அதனை அமைதிப்படுத்தினார். என்று அவரையே அவர் புகழும் சமாச்சாரத்தை காணக்கூடியதாக உள்ளது. அப்படி என்றால்…….
‘நிகழ்வுகள் முடிவுற்று இராப்போசனம் நடக்கையில் குறித்த சம்மேளனத்தின் தலைவரும், செயலாளரும் எம்மிடம் வந்து அந்த மௌலவிக்கு (காசிம் பலாஹி) அழைப்பு தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டதாகவும் இதுதொடர்பில் தாங்கள் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்கள் என தெரிவித்தனர்’ இவ்வாறு இவர்கள் கூறி இருப்தானது எதனை காட்டுகின்றது.
இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்..? அல்லது யாரை திருப்தி படுத்த முனைகிறார்கள்..? ஊடக அறிக்கையை விட்டு விட்டு ஊத்தையை மறைக்க பார்க்கிறார்களா….? ஒரு நிகழ்வுக்கான அழைப்பை தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டதாக தலைவரும், செயலாளரும் ஏன் பொய் சொல்ல வேண்டும்..? இல்லை என்றால் உலமாஉ சம்மேளனத்தில் அங்கத்தவராக உள்ள சூபிச உலமாக்களுக்கு அழைப்பு அனுப்பவது தொடர்பில் அவர்கள் மசூறா செய்திருக்க வேண்டும். ஒரு விடயம் மாத்திரம் உண்மை. ‘உண்மை ஒரு போதும் அழிவதில்லை’. எனவே தலைவரும் செயலாளரும் உண்மையான ஊடக அறிக்கை ஒன்றினை மிக விரைவில் வெளிட வேண்டும்.
1. காசீம் மௌலவிக்கு யாரால் அழைப்பு அனுப்ப பட்டது..?
2. சாசீம் மௌலவி இமாம்கள்.கதீப்மார்கள் கம்மேளனத்தின் அங்கத்தவரா..?
3. காசீம் மௌலவியின் வருகையை முன்னின்று எதிர்த்த உலமாஉகள் யார்..?
4. காசீம் மௌலவியிடம் சென்று என்ன விடயத்தை கூறி அவரை சமாதானப்படுத்தி வெளியேற்றினீர்கள்..?
5. காசீம் மௌலவியை வெளியில் அனுப்பி விட்டு வந்து பள்ளிக்குள் இருந்த உலாமாக்களிடமும், கதீப் மார்களிடமும் என்ன கூறினீர்கள்…?
6.அந்த மௌலவிக்கு (காசிம் பலாஹி) அழைப்பு தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டதாக நீங்கள் சென்னதன் இரகசியம்தான் என்ன..?
இன்னும் உள்ளன இப்போதைக்கு இவை போதும். இவற்றுக்கு ஊடக அறிக்கை ஒன்றினை விடுங்கள்.
Published by



Leave a comment