வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

srilanka_parliament-8[1]– அபூஹக்

கொழும்பு: நிதி அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் இன்று (24) பி.ப 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது நகரங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த உட்கட்டமைப்பு வசதிகள் கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த தசாப்தத்தில் அர்த்தமுள்ள அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் வரவு செலவுத் திட்டம் ஆரம்ப உரையில் தெரிவித்தார்.

ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்

• ‘யுதார்த்தபூர்வமான அரசியல் முன்மொழிவுகள் மூலம் காத்திரமான நாட்டையும் தேச மக்களையும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பைக் கேட்டுக் கொள்கின்றேன்’

• ‘பல்கலைக்கழக மாணவர்களின் வதிவிடப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 25,000 மாணவர்களுக்கான வதிவிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன’

• ‘பாடசாலை மாணவர்களின் ஆங்கில, விஞ்ஞான, தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் பாடசாலைகளில் வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன’

• ‘கிராமப்புற பாடசாலை மாணவர்களின் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நுற்றுக்கு 62.4 என்ற மட்டத்திற்கு அதிகரித்துள்ளது.’

• ‘இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் இலங்கையில் சிறந்த 10 பேரில் ஒன்பது போர் கிராமப்புற பிள்ளைகளாவர்’

• ‘2020ஆம் ஆண்டின்போது தகவல் தொழில்நுட்ப அறிவு மட்டத்தை 90 வீதமாக அதிகரிப்பதே எமது எதிர்பார்ப்பாகும்’

• ‘அரச சேவையினரை 14,000 வரை அதிகரித்தோம்’

Published by

Leave a comment