-டீன்பைரூஸ்-
காத்தான்குடி: புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லா வளாகத்தில் இயங்கி வரும் ஹெப்பி ஹிட்ஸ் மற்றும் ஹிஸ்புல்லா பாலர் பாடசாலை என்பவற்றிக்கான “பாலர் விளையாட்டரங்கு” அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (23.10.2014 வியாழக்கிழமை) பாடசாலை வளாகத்தில் பாடசாலை தலைவர் அல்ஹாஜ் MSM அப்துல்லா JP தலைமையில் நடை பெற்றது. பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் சிப்லி பாறுாக் Eng கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்வினில் காத்தான்குடி நகர முதல்வர் அல்ஹாஜ் SHMஅஸ்பர் JP, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் HHM பாக்கீர் BA/JP, மௌலவி அல்ஹாஜ் ஏ.ஆதம்லெப்பை(பலாஹி) மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் SMMமுஸ்தபா பலாஹி)JP, சமூர்த்தி வங்கி முகாமையாளர் MAMசுல்மி JP, கிராம உத்தியொகஸ்தர் நிரோஷா கியாஸ் உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
கடந்த காலங்களில் பாடசாலை நிர்வாகத்தினால் கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் MLAMஹிஸ்புல்லா MA/MP அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து மேற்படி பாலர் விளையாட்டரங்கு அமைப்பதற்கென சுமார் ஜந்து இலட்சம் ரூபாய் நிதியினை பிரதி அமைச்சர் MLAMஹிஸ்புல்லா MA/MP ஒதுக்கி உள்ளார்.
விளையாட்டரங்கிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் சிப்லி பாறுாக் Eng அவர்களினால் நடப்பட்டது. இதன் பொது அதிதிகள் உட்பட பாடசாலை ஆசிரியைகள்,மாணவர்கள், பொற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் பொது மாணவா்களுக்கு அல்குர்ஆன் பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டது.






Leave a comment