‘சாய்ந்தமருது சிறார்கள் கவலைப்பட வேண்டாம்’ – ஹரீஸ் எம்.பி

Harees MPssசாய்ந்தமருது: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருதுகடற்கரை சிறுவர் பூங்கா அமைப்பதற்காக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர்சிராஸ்  மீராசாஹிபின் காலத்தில் 1 கோடியே 67 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில் கடற்கரை சிறுவர் பூங்கா அமைப்பதற்காக முன்னாள் முதல்வரும் பொறியியலாளர்களும் சேர்ந்து சகல அம்சங்களுக்குரிய சிறுவர் பொழுதுபோக்கு விளையாட்டுஉபகரணங்களை உள்ளடக்கியதாக முழுமையான கடற்கரை சிறுவர் பூங்காஅமைக்கப்படுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டது.

அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் முன்னாள் முதல்வர் சிராஸ்மீராசாஹிபின் அழைப்பின் பேரில் கடற்கரை சிறுவர் பூங்கா அபிவிருத்தி வேலைகளை நான்ஆரம்பித்து வைத்தேன்.

ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அன்றுஇவ்வேலைகளுக்கு தடங்கள்கள் ஏற்பட்டபோது நான் தலையிட்டு மாநகர சபையின்நிர்வாகத்துடன் இணைந்து கடற்கரை சிறுவர் பூங்கா அமைக்கும் வேலைகளுக்கு முழுஉதவிகளையும் செய்து கொடுத்தேன்.

இந்த அடிப்படையில் இன்று திறக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் பூங்கா தொடர்பாகசில விமர்சனங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். அதில் முக்கியமாகஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரை படத்தில் இருந்த சிறுவர் விளையாட்டுப் பகுதி முற்றுமுழுதாக செய்யப்படவில்லை என்பதுடன் ஏனைய அம்சங்கள் நிறைவடையாமலும்அவசரமாக சிறுவர் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த சாய்ந்தமருது மக்களுக்கும், சிறுவர்களுக்கும்ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்குரிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாதவிடயத்தை பிரதேச நலன்விரும்பிகள் தொடர்பு கொண்டு என்னிடம் முறையிட்டனர்.

எனவே, பெரும் எதிர்பார்ப்பில் இருந்து பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு  அதிரடிநடவடிக்கையாக சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்ட பிரதேசத்தில் சிறுவர்விளையாட்டு தொகுதிகளை  உள்ளடக்கிய முழுமையான  சிறுவர் பூங்கா  ஒன்றினைஅமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அனுமதியினையும் பெற்றுள்ளேன்.

அதற்கான சகல அபிவிருத்தி வேலைகளையும் இன்னும் இரண்டு மாதத்திற்குள் செய்து முடித்துசிறுவர்களின் எதிர்பார்ப்புக்களையும், கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்குஎண்ணியுள்ளேன்.

இந்த விடயம் சம்பந்தமாக ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பில் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்குழுவின் தலைவர் என்ற வகையில் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்த பொருளாதார அபிவிருத்திஅமைச்சின் புறநெகும திடட்டத்திற்குப் பொறுப்பான பணிப்பாளரிடம் முறைப்பாடுசெய்வதற்கும் தீர்மானித்துள்ளேன் என்றார்.

Published by

Leave a comment