காத்தான்குடி: அத்வைதிகள் நேற்றைய தினம் நடாத்திய மாநாட்டில் பிரதம பேச்சாளராகப் பங்கேற்ற ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவருக்கு 14.10.2014 ம் திகதியன்று தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க விவாத அழைப்பொன்றை அனுப்பி வைத்திருந்தது.
குறித்த விவாத அழைப்புக் கடிதத்தை பெற்றுக் கொண்ட ஷேக் ஜமாலி, இதுவரைக்கும் எமக்கு உத்தியோகபூர்வமான எந்தத் தகவலையும் தெரிவிக்காத நிலையில் நேற்றிரவு நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் எமது சவாலை எதிர் கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.
தனது அறிவித்தலில் விவாதம் சம்பந்தமாக பின்வரும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள் என ஒரு மொபைல் இலக்கத்தையும் அறிவித்திருந்தார். அந்த இலக்கத்திற்கு நாம் உத்தியோகபூர்வமாக தொடர்பு கொண்டோம்.விவாத ஒப்பந்தம் செய்வது தொடர்பான கடிதத்தை அனுப்புவதற்கான முகவரியைப் பெற்று அந்த முகவரிக்கு எமது கடிதத்தை அனுப்பி வைத்தோம்.
நாம் அனுப்பிய விவாத ஒப்பந்தக்கடிதத்தைக் காண இங்கு சொடுக்குக.
Published by


Leave a comment