வாழ்வின் எழுச்சி (திவிநேகும) நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்ட நிகழ்வு ஏறாவூரில்

eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: வாழ்வின் எழுச்சி (திவிநேகும) நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்ட நிகழ்வு இன்று (20-10-2014) காலை 10.07 மணிக்கு ஏறாவூர் -2 ,விதானையார் வீதியிலுள்ள விவசாயி ஜனாப் ஹச்சி முஹம்மது என்பவரின் இல்லத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு தேசிய காங்கிரசின் மாவட்ட செயலாளரும் ,பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நஸீர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்ததோடு மர ,நடுகையிலும் கலந்துகொண்டார்.

eravur

“நிறைவான இல்லம்,வளமான தாயகம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஏறாவூர்- 2,கிராமசேவை பிரிவுகளை சேர்ந்த சுமார் 120 சமூர்த்தி பயனாளிகளுடன், அப்பகுதி கிராம சேவையாளர் ஜனாப் எம்.எம்.எஸ்.பளீல் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் வீ. ஜவாகிர், வாழ்வாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஏ.ஜே.பாத்திமா றாபி ,ஓய்வுபெற்ற ஆசிரியர்களான அல்ஹாஜ் எச்.எம்.ஹுசைன், அல்ஹாஜ் எம்,ஏ.அப்துல் காதர், எம்.எஸ்.எம்.ரியால் (கொமேர்சியல் வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

???????????????????????????????

நாடு முழவதுமாக 14022 கிராம சேவை பிரிவுகளில் இந்நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

eravur

Published by

Leave a comment