ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட ,ஏறாவூர் பிரதேச டிப்போவுக்கு சொந்தமான இ.போ.ச. பஸ்சானது மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி செல்லும்போது இன்று (20-10-2014) மதியம் சந்திவெளியில் வைத்து வீதியோரமாக கம்பீரமாக நின்ற வேப்பமரத்துடன் மோதியதால் ஒன்பது பிரயாணிகள் காயமுற்று மாவடிவேம்பு வைத்தியசாலையிலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சற்றுமுன் நடந்த இவ்விபத்து பற்றி விசாரிக்கையில்,
பஸ்ஸின் சாரதி ஓடும்போதே வானொலிப் பெட்டியை இயக்கும் ரிமோட் கொன்ரோலை கையிலெடுத்தபோது தவறி விழுந்ததால்,அதனை மீண்டும் கையிலெடுக்க குனிந்தபோதுதான் பஸ் பாதையை விட்டு விலகி மரத்தில் மோதியதாகவும், மரம் வேரோடு பிடுங்கப்பட்டு வந்ததாகவும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோர் தெரிவிக்கின்றனர்.
ஏறாவூர் டிப்போவுக்கு, சென்ற மாதம்தான் புதிதாக இந்த பஸ் தருவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Published by




Leave a comment