சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திவிநெகும தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஆறாம் கட்ட பிரதான நிகழ்வு

sainthamaruthu (2)– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திவிநெகும தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஆறாம் கட்ட பிரதான நிகழ்வு சாய்ந்தமருது – 01ம் கிராம சேவக பிரிவில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திவிநெகும பயனாளிகளுக்கு மரக்கன்றுகளையும், விதைகளையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாhளர் ஏ.எல்.ஏ.மஜீத், திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலின் செயலாளர் சீ.எம்.முனாஸ், திவிநெகும திட்ட முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வீ.எம்.அன்லைஸ், உள்ளிட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், கிராம சேவக உத்தியோகத்தர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிதிகளினால் திவிநெகும பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும், விதைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

sainthamaruthu (2)

sainthamaruthu

Published by

Leave a comment