கிழக்கு மாகாண மட்ட மீலாத் போட்டியில்- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 198 அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடம்
– பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: கிழக்கு மாகாண மட்டத்திலான மீலாத் போட்டியில் 198 அதி கூடிய புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலிடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் மௌலவி எம்.ஐ. அப்துல் கபூர் (மதனி) தெரிவித்தார்.
9 வலயங்கள் போட்டியிட்ட இப் போட்டியில் 84 புள்ளிகளைக் பெற்று இரண்டாவது இடத்தை சம்மாந்துறை கல்வி வலயம் பெற்றுள்ளதோடு மூன்றாவது இடத்தை அக்கறைப்பற்று கல்வி வலயம் பெற்றுள்ளது.
இதில் முதலாவது இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் இரண்டாவது இடத்தைப் பெற்ற சம்மாந்துறை கல்வி வலயத்தைவிட 114 மேலதிக புள்ளிகளால் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணம்
இப் போட்டி கடந்த 2014-10 18 சனி மற்றும் 19 ஞாயிறு ஆகிய திகதிகளில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இவ் மாகாண மட்ட மீலாத் போட்டியில் கிராஅத்,அல் குர் ஆன் மனனம்,கட்டுரை,கவிதை, தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,அறபு ஆகிய மொழிகளில் பேச்சு ,சிறுகதை,ஹஸீதா போன்ற பல்வேறு போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment