– முஹிப்பீன்
காத்தான்குடி: காத்தான்குடி 5 பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் இரண்டு நாட்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்த “ ஸூன்னத்வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின்” இறுதி நிகழ்வாக கொள்கைப் பிரகடனம் ஒன்றும் காத்தான்குடி 5 பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவரும், அல்குல்லியதுர் ரப்பானியா மதரசாவின் அதிபருமான “மாதகர் றசூல்” எச்.எம்.எம்.இபறாஹீம் (நத்வி) JP இனால் வாசிக்கப்பட்டு உலமாஉகளின் ஒருமித்த தக்பீர் முழக்கத்துடன் பிரகடனம் அங்கீகரிக்கப்பட்டதுடன் அகில இலங்கை ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சம்மேளனமும் உருவாக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சம்மேளனமும் உருவாக்கப்பட்டுள்ள நிகழ்வானது “ வஹ்ஹாபிகளுக்கும், தௌஹீது வாதிகளுக்கும் பலத்த நெற்றியடியாகும் ” என உலமாஉகள் தெரிவிக்கின்றனர்.
அகில இலங்கை ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சம்மேளனத்தின் தலைவராக “ மௌலவி அல்ஹாஜ் ஏ.ஜே. அப்துர்றஊப் (மிஸ்பாஹி) JP அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன், செயளாலராக மௌலவி அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். காசீம் (பலாஹி) JP அவர்களும், பொருளாலராக மௌலவி கே.ஆர்.எம். ஸஹ்லான் (றப்பானி) BBA/JP தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் .
அகில இலங்கை ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சம்மேளனத்தின் ஏனைய உப தலைவர்கள், உப செலாளர்கள், நிர்வாக சபை உறுப்பினர்களாக பத்துக்கும் மேற்பட்ட உலமாக்கள் பல ஊர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Published by


Leave a reply to mohmedrislan Cancel reply