செட்டிப்பாளையம் கடற்கரையில் கரையொதுங்கிய 50 அடி நீளமான திமிங்கிலம்!

fishகளுவாஞ்சிகுடி: மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (16) மாலை பாரியதொரு மீன் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ச் தெரிவித்தார்.

இது ஒரு வகையான திமிங்கில மீனினமாகும். செட்டிபாளையம் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள மீன் சுமார் 50 அடி நீளமும் 5 தொன் எடையுமுள்ளதாகவும் இருக்கும், இது குறித்து தேசிய நீர்வள ஆராய்ச்சி அதிகார சபை எனப்படும் நாரா நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ச் மேலும் தெரிவித்தார்.

fish

– தினகரன்

Published by

Leave a comment