‘கல்வி அமைச்சின் 2008/45 சுற்றறிக்கையின் நன்மைகள் அனைத்தையும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம் சகலருக்கும் முழுமையாக வழங்கக் வேண்டும்’

coop– இர்ஷாட் ரஹ்மதுல்லா

சம்மாந்துறை: கல்வி அமைச்சின் 2008/45 சுற்றறிக்கையின் நன்மைகள் முழுவதையும் பலருக்கு வழங்கியுள்ள சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம், சிலருக்கு அதனை முழு மையாக வழங்க மறுத்து வருகின்றது.  அதனால் அவர்கள் தொடர் நன்மைகள் பலவற்றை இழக்கும் பரிதாக நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இச்சுற்றறிக்கை இலங்கை ஆசிரியர் சேவை தாபிக்கப்பட்ட தினத்தில் சேவையில் இருந்த, அங்கீகரிக்கப்பட்ட பட்டச் சான்றிதழைப் பெற்றுக் கொண்ட சகல பட்டதாரி ஆசிரியர்களுக்கும், அதற்கு அடுத்த நாள் சேவைக்கு வந்த ஆசிரியர்களுக்குக்கூட இல்லாத சலுகைகள் பலவற்றை அள்ளி வழங்கியுள்ளது. சம்மாந்துறைக்கல்வி வலயம் இதனை பலருக்கு அப்படியே வழங்கியுள்ள போதிலும், சிலருக்கு அதனை அப்படியே வழங்காது, இறுக்கிப்பிடித்து அநீதி இழைத்து வருகின்றது.

அந்த நன்மைகளை முழுமையாகப்பெற இந்தச் சிலர் படும் சிரமங்களைப்பார்த்தால் கல்லும் கரைந்துவிடும் ஆனால் இந்த அதிகாரிகளின் உள்ளங்களோ எள்ளள வேனும் கசிவதாகத் தெரியவில்லை. 2008/45 சுற்றறிக்கை வெளிவந்து வருடங்கள் ஆறு கடந்துவிட்டபோதிலும் இன்னும் காலங்கடத்தப்பட்டு வருகின்றது.
1994.10.07 இல் சேவைக்கு வந்த பட்டதாரி ஆசிரியர், சேவையின் வகுப்பு 2-ஐஐக்குப் பதவி உயர்வுபெற 5புள்ளியை அல்லது பின்கல்வி டிப்ளோமா சான்றிதழைப் பெற் றிருக்க வேண்டும்.

ஆனால் 1994.10.06 இல் சேவையில் இந்த பட்டதாரி ஆசிரியர் 5பள்ளியை அல்லது பட்டப்பின்கல்வி டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருக்காவிட்டாலும், 1994.10.06 இல் சேவையின் வகுப்பு 2-ஐஐக்குப் பதவி உயர்வுபெற அனுமதிக்கின்றது.

ஆசிரியர் சேவைக்கு அடுத்த தினத்தில் சேவைக்கு வந்த பட்டதாரிகள் 2-ஐஐக்கு மேல் பதவி உயர்வுபெற, பின்கல்வி டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டி யது கட்டாயமாகும். ஆனால் 1994.10.06இல் சேவையில் இந்த பட்டதாரி ஆசிரி யர்கள்; பின்கல்வி டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருக்கவிட்டாலும் 2-ஐஐக்கு மேல் புதவி உயர்வுபெற அனுமதிக்கின்றது. அதாவது பயிற்றப்படாத பட்டதாரிகளையும் பயிற்றப்பட்ட பட்டதாரிகளாகக்கருதி பதவி உயர்வு வழங்க அனுமதிக்கின்றது.

அவ்வாறே,இத்தினத்தில் சேவையில் இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, சேவைக்கு வந்த முதலாவது வருட ஆரம்ப தினத்தில் ஒரு புள்ளியும், பத்தாவது வருட ஆரம்ப தினத்தில் ஒரு புள்ளியுடன் (மொத்தமாக 09 புள்ளிகளுடன்) சேவையின் வகுப்பு 2-ஐக்கான பதவி உயர்வு வழங்கவும் அனுமதிக்கின்றது.

ஆனால், இத்தினத்திற்குப்பின் சேவைக்கு வந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வைக்கு வந்த முதலாவது வருட இறுதி தினத்தில் ஒரு புள்ளியும், பத்தாவது வருட இறுதி தினத்தில் ஒரு புள்ளியுடன் (மொத்தமாக 10 புள்ளிகளுடன்) சேவை யின் வகுப்பு 2-ஐக்கான பதவி உயர்வு வழங்கவே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வருடத்தின் ஆரம்ப தினம் ஒரு நாள் என்பதையும், வருடத்தின் இறுதி தினம் 365 நாட்கள் என்பதையும் புரிந்து கொள்ள சம்மாந்துறைக் கல்வி வலயம் மறுக்கின்றது. 9ஆவது வருடமும் 9வருடமும் அல்லது 10ஆவது வருடமும் 10 வருடமும் ஒன்று என்கிறது. இதன்காணமாக ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது, ஒருவருட நட்டமும், ஒரு புள்ளி நட்டமும், பதவிக் காலத்தின்போது ஒரு வருட சம்பள உயர்வு நட்டமும் ஏற்படுகின்றது.

9ஆவது வருடத்திற்கும், 9வருடத்திற்கும் அல்லது 10ஆவது வருடத்திற்கும் 10 வருடத்திற்கும் என்ன வேறுபாடு?. அதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு, 24 மணித்தியாலங்களைக் கொண்டது ஒருநாள் வருடத்தின் ஆரம்ப தினம் என்பதையும், 365 நாட்கள்களைக் கொண்டது ஒரு வருடம் வருடத்தின் இறுதி தினம் என்பதையும் புரியவைக்க அதனைக் கணித்த வர்களைத்தான் நாடவேண்டும்.

2008/45 சுற்றறிக்கையின்படி, ஆசிரியர் சேவையின் ஆரம்ப தினமான 1994.10.06இல், சேவையில் இருந்த பட்டதாரி ஆசிரியர்,ரூபா 1,560/- பெறுமதியான 8சம்பள உயர்ச் சிப் படிநிலைகளை உள்ளடக்கிய சம்பளத் திட்டத்தின் ஆரம்பப் படிநிலையில் அதாவது 53,880/- ரூபாவுடன் ஒரு புள்ளியுடன், சேவையின் வகுப்பு 2-ஐஐஇல் அமர்த் தப்படல் வேண்டும்.

தொடர்ந்து 9ஆவது வருடத்தின் ஆரம்ப தினமான 2002.10.06இல், ஒன்பது புள்ளி யுடன் 8ஆவது சம்பள உயர்ச்சிப்பெறுமதியுடன் 66,360/- ரூபா சம்பளப் படிநிலையில் அமர்த்தப்படல் வேண்டும். இது வருட இறுதி தினமான 2003.10.05வரை தொடரும்.

மறுநாள் 10ஆவது வருடத்தின் ஆரம்ப தினமான 2003.10.06இல் 3,000/- ரூபா பெறு மதியான 7 சம்பள உயர்ச்சிப் படிகளை உள்ளடக்கிய சம்பளத் திட்டத்தின் ஆரம் பப்படிநிலையில், அதாவது 80,400/- ரூபாவுடன், ஒருபுள்ளியுடன், சேவையின் வகுப்பு 2-ஐஇல்; அமர்த்தப்படல் வேண்டும். இது 10வருடம் முடிந்தபின் வரும் தினத்திலல்ல.

அவ்வாறு 2-ஐக்கு அமர்த்தப்படுவது 10வருட முடிவில், 2004.10.06இல் எனின், 2003. 10.06முதல் 2004.10. 05 வரையிலான காலப்பகுதிக்கான சம்பளப்படி என்ன? சம்பள உயர்ச்சி என்ன? இந்த ஒருவருடத்தற்கான புள்ளிக்கான நன்மை என்ன? என்பதற்கு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம் பதில் சொல்ல வேண்டும்.

இச்சுற்றறிக்கையின் அமுலாக்கம் பற்றிய தெளிவாக்கம் 2009.11.04இல், பட்டியிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில், முன்னாள் மேலதிக மாகாணக் கல்விப் பணிப் பாளர் எம.கே.எம்.மன்சூர் தலைமையில் நடாத்தப்பட்ருந்தமையும், அதில் நிர்வாகத் திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் இரு முகாமை உதவியாளர்கள் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SRI LANKA ISLAMIC TEACHERS’ UNION

128, Anpu Road, Akkarai pattu – 01 # 32 400.

ஒப்பம்.

அல்-ஹாஜ் எம்.அனஸ் ஜேபி, 

தேசியத் தலைவர்.

எ.எஸ்.எம்.சலீம் ஜேபி,

தேசிய பொதுச் செயலாளர் 

Published by

Leave a comment